பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


அதான், தெவ்விக்குட்டி இப்படியான அவல நிலைக்கு ஆளாக்கிப் போயிருக்குதுபோலே தாய்க்குத் தாயான ஆத்தாளே, எனக்கு ஒரு நல்ல பாதையைக் காட்டிப்பிடு, அப்பத்தான், என்னாலே தெய்வானைப் பொண்ணுக்கு ஒரு நல்ல பாதையைக் காட்ட ஏலுமாக்கும்!’-மூக் கைச் சிந்தி வீசினார் ; புகையிலை எச்சிலைக் காறித்துப்பினார். பொழுது பட்டு ஆறு, ஆறரை நாழிகைப் பொழுது ஆகியிருக்கும் ; போனதும் வந்ததுமாகத் திரும்பமாட்டாளா இந்த மங்கத்தாக்குட்டி !

பாறையொலி கர்ண கடுரமாகக் காற்றிலே மிதந்து வந்தது

சாம்பான் செவிகளைப் பொத்திக் கொண்டார் ‘அக்கரை சீமையிலே படுபாவி சிங்களவன் கிட்டேயிருந்து தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் அப்படின்னு உயிர் தப்பிக் கள்ளத்தோணி ஏறி ஒடியாந்து இப்பைக்கு மேலத் தெருவிலே குந்தியிருக்கிற சின்னத்துரை தான் இப்படித் தப்புத் தப்பாய்த் தப்புக் கொட்டிக்கிட்டு இருக்க வேணும் ! சே! இடுப்பின் அடிமடியில் செருகப்பட்டிருந்த சுருக்குப் பையைத் துழாவிஎடுத்தார் அவர் ; அதற்குள், கிழவருக்குக் கிழவியைப் பற்றின கிலேசம் மிஞ்சவே. எச்சரிக்கையாகக் குனிந்து வெளியே வந்தார்.

ஜாதி முல்லைப் பூக்களைக் கொட்டி விட்டாற்போன்று படர்ந்திருந்த பிறை ஒளியில் அங்கும் இங்குமாக முளைத் திருந்த குடிசைகள் கூட அழகாகவே தெரிந்தன.

சொறி நாய் தென் திசையினின்றும் ஊளை இடுகிறது. சாம்பானுக்குத் தி.கீரென்றது இப்போது அவருக்குத் தெய்வானையின் சோக நினைவு மீண்டும் திரும்பி விட்டது. .ெ த வ் விப் பொண் ணு எனக்குச் சொந்தம் கிடையாது ; ஆனாலும், நல்ல பொண்ணுர. எங்க தங்கம்மான்னா அதுக்கு உசிரும் பிராணனும் தெய்வானை f{ ಛಿಜ ; வி ட் டு ச் சிரிச்சாத்தானே நானும் சிரிக்க வாய்க்கும்? அப்பத்தானே, சேரியிலே