166
‘செர்ட்டன் லி. உங்க குறிப்பு அப்பட்டமான உண்மைதான், லார்!’
நேற்று ராத்திரி உங்களுக்காக வெகு நாழி காத்தி ருந்தேன். கடைசியிலே ஒரு நண்பரைத் தேடிப் புறப்
பட்டேன்.’
என்னை மன்னிச்சிடுங்க. உங்களை அநியாயமாய்க் காக்க வச்சிட்டேன்.’
‘உங்க அப்பாகூட நீங்க இங்கு வந்தீங்களான்னு என் கிட்டே போன்’ மூலம் விசாரிச்சாங்களே ?”
4.ஒரு அவசர ஜோலியாய் வெளியே போனேன். டயம் ஆயிட்டுது. கொஞ்ச முந்தி நான் உங்களைத் தேடி வந்தேன். இப்போ நான் வந்தது இரண்டாம் தடவை நேத்தைக்குக் காலையிலே கூட உங்களுக்கு இங்கே போன் செய்தேன். ரெஸ்பான்ஸ் இல்லை !’’
“அப்படியா ? தெரிந்த சிநேகிதியோடு கொஞ்சம் வெளியில் புறப்பட்டுப் போக வேண்டி வந்திட்டுது !” என்று அறிவித்தான் அம்பலத்தரசன் தன்னை பூமிநாதன் ‘ஜாடையாக ஒரக்கண் கொண்டு பார்த்த பாவனையை அம்பலத்தரசனா கவனிக்காமல் இருப்பான் ?
பிரிந்து கிடந்த செய்தித்தாளைப் புரட்டினான் பூமிநாதன்.
கனடாவிடமிருந்து 50 -யு. எஸ். சேபர் ரக விமானங் களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது பற்றி ய தகவல் பாரதத்துக்குக் கிடைத்து, இவ்விவரத்தை யு. எஸ் சர்க் காரின் கவனத்துக்கு இந்தியா கொண்டு வந்துள்ள விஷயம் தலைப்புச் செய்தியாக விளங்கியது.
பத்திரிகையைப் போட்டுவிட்டு எம்பி உட்கார்ந்தான் பூமிநாதன். அப்போது அவனது சட்டைப் பொத்தான்