பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167


சுழன்றது. அவன் மார்பில் அன்று கண்ட அந்தப் பெரிய ரத்தத் தழும்பு துளியளவு கன்றிப் போய்க் காணப்பட்டது. இக்காட்சி அம்பலத்தரசனை இப்போதும் கவரத் தவறவில்லை. அதே கணத்தில், ஊர்வசியின் மார்பில் தெரிந்த அந்த ரத்தத் தழும்பையும் அவன் தன் நெஞ்சில் ஏற்றிக்கண்டான் !.

“சிகரெட் ப்ளீஸ்’ உபசரித்து ப்ளேயர்ஸ் பாக் கெட்டை அம்பலத்தரசனிடம் நீட்டினான் பூமிநாதன் பூ” என்ற மோதிர எழுத்து ஒளி வீசியது.

“ப்ளீஸ் எக்ஸ்யூஸ்மி!’

‘ஏன் ?....நீங்கதான் செ யி ன் ஸ்மோக்கராச்சே, அம்பலத்தரசன் ஸார்?’

‘அந்தக் கெட்ட பழக்கம் இன்றையிலேருந்து என் கிட்டே விடை பெற்றிடுச்சு” என்று நிதானமாகச் சொன்னான் அம்பலத்தரசன்.

‘நீங்க பரவாயில்லை பலகாலப் பழக்கத்தை ஒரு நாளையிலே மாற்றிக்கிட்டுட்டீங்க என்னாலே அப்படிச் செய்ய முடியலை 1. கொட்டாவி புறப்பட்டது.

‘மனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போயிடும்?” ‘உங்க போக்கே எப்பவும் ஒரு தனி டைப் ஆச்சிங் களே, லார்?’ என்றான் பூமிநாதன்.

இதற்கு விடையாக எதுவும் பேசவில்லை அம்பலத் தரசன். அவன் மனம் தீவிரச் சிந்தனையில் வசப்பட் டிருந்திருக்க வேண்டும் !

தலையை தொங்கப் போட்டுக் கொண்டு புகையைக் கக்கிக் கொண்டேயிருந்தான் பூமிநாதன்.

தலையை நிமிர்த்திக்கொண்டு தன் உற்ற நண்ப னையே உன்னிப்புடன் ஆராய்ந்து கொண்டிருந்தான் அம்பலத்தரசன். அவ ன து மனத்தின் ஒரு புறத்தில் ஒதுங்கித் துரங்கிய வக்கிர புத்தி விழித்துக் கொண்டது.