பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173


ஆனால் பூமிநாதனிடமிருந்து யா .ெ த ரு பதிலும் கிளம்பவில்லை,

‘ஐயா, நீங்க...?’ என்று தூண்டினாள் ஊர்வசி

‘வருகிறேனே’ என்று த டு ம .ா ற் ற த் துட ன் பூமிநாதன் சொன்னான்.

கீழ்த்தளத்துக் கடிகாரம் பதினொன்று அடித்தது.

“ஊர்வசி, நான் எங்க பங்களாவரைப் போயிட்டுத் திரும்பிடுறேன். கட்டாயம் உங்க விருந்திலே கலந்துக்கிடு வேன். பயப்படாதீங்க, உங்க அன்பை என்னாலே எப் போதும் மறக்க இயலாதுங்க” என்று சொல்லி எழுந்தான், பூமிநாதன்.

ஊர்வசியின் சிவந்த முகம் கறுத்து வந்தது.

நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. நானே உங்க வீட் டுக்கு - மன்னிச்சிடுங்க - உங்க பங்களாவுக்கு வந்து உங் களைச் சந்திக்க வேணும்னுதான் யோசிச்சுக்கிட்டிருந் தேன். நல்ல வேளையாக நீங்களே வழி மறிச்சுத் தரி சனம் கொடுத்து நீங்க இங்கே இருந்திட்டிங்க. நீங்க தான் இன்னிக்கி எங்க வீட்டின் பிரதம விருந்தாளி வாங்க, அரை மணிக்குள்ளே உங்களை அனுப்பி வைச்சுப்பிடறேன்’ என்று வற்புறுத்தினாள் அவள்.

‘எங்க அப்பா இருந்திருந்தால் என்னோட கலைத் தொண்டைக் கண்டு இந்நேரம் ஒரு பெரிய டின்னருக்கே அரேஞ் பண்ணியிருப்பார்; அவர் காலம் முடிஞ்சு பல கால மாயிடுச்சு. எங்க சொத்து பத்து, நிலம் நீச்சைக் கொண்டு என்னை எங்கம்மா காப்பாத்துறாங்க ஏதோ இந்த ஏழை வீட்டு எள்ளுருண்டையை உங்களைப் போல உள்ள பெரிய இடத்துப் பிள்ளைங்க - பெரிய மனுசங்க - பெரிய மனசு பண்ணிச் சாப்பிட்டால் அதுதான் எனக்குப் பரம திருப்தி தரும்” என்று தொடர் சேர்த்து நிறைத்தாள் ஊர்வசி.