பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174


“ஆமாம் மிஸ்டர் பூமிநாதன்! இவ்வளவு தூரம் சொல்றபோது, நீங்க வந்து சாப்பிட்டுப் போறதுதான் பண்பாக இருக்கும்’ என்றான் அம்பலத்தரசன்.

‘ஓ கே’’ என்று ஆ ேமா தி ப் பு க் கொடுத்தான் பூமிநாதன். பிறகு வலது பக்கத்துச் சட்டைப் பையைக் குனிந்து பார்த்து, அத்துடன் திருப்தியுறாமல் தடவியும் பார்த்தான், அந்த இடத்தில் அவன் இருதயம் இருக்க நியாயமில்லை!

ஊதுவத்தியின் இருப்பிடம் தெரியவில்லை. அதன் சுகந்தம் மட்டிலும் இன்னமும் கமழ்ந்து கொண்டிருந்தது. சாம்பல் தூள் காற்றில் சிதறியது.

“புறப்படலாமா, பூமிநாதன்?’ என்று எழுந்தான் அம்பலத்தரசன் முகத்தில் தெளித்திருந்த நீரைத் துடைத் தான், சிந்தனையின் லயிப்பில் கட்டுண்டிருந்த பூமிநாதனை தோளைப் பற்றி மெல்லத் தட்டினான் அவன்.

‘ஓ’ என்று எழுந்தான் பூமிநாதன். அறைக் கதவுகள் மூடிக்ெெ.ாண்டன. கதவுகளுக்கு இதயம் இருந்தது. அவர்கள் மூன்று பேரும் வெளியேதான் நின்றார்கள்.

[16]

தண்டுமாரியம்மன் அப்பொழுது என்றுமில்லாத சிரிப்புட்ன் - அட்டகாசச் சிரிப்புடன் விளங்கினாள் !

அழகிய ‘டாட்ஜி'லிருந்து அழகிய ஊர்வசி இறங்கி னாள். பின், ஆணத்தாழ் விலகி மூடிக்கொண்டது.

முன்புறத்திலிருந்து அம்பலத்தரசனும் பூமிநாதனும் இறங்கினார்கள்.