பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178


புரிஞ்சுக்கிட்டேனே 1 கொட்டாவி பிரிந்தது, முகக் களையும் பிரிந்தது.

இலைகளில் தண்ணிர் தெளித்துப் போட்டாள் மீனாட்சி அம்மாள். குனிந்து நிமிர்வதற்குள் மூச்சு வாங்கியது.

சாதம். கறி வகைகளைப் பரிமாறினாள் ஊர்வசி. கழுத்துச் சங்கிலியின் பதக்கம் தரையை இலக்குவைத்து ஊசலாடிக் கொண்டிருந்தது.

அப்போது பூமிநாதனின் கவனம் ஒரு பழைய செய்தித் தாளில் இருந்தது.

அம்பலத்தரசன் பார்வையைச் செலுத்திய நேரத்தில் ஊர்வசியின் கவர்ச்சி கனிந்த ,மார்பகத்தில் தெரிந்த அந்த ரத்தத் தழும்பு தென்பட்டது. ‘என் ஊர்வசியை இந்தக் கதிக்கு உள்ளாக்கின. அந்தப் பாவி யார் ? இளையபிரானே குற்றம் செய்த துரோகியை எப்போது காட்டப் போகிறாய் நீ ?. அவன் கண்கள் கசிந்தன. மனக்கசிவு விழிகளைத் தஞ்சம் அடைந்ததோ ?

ஊர்வசி நிமிர்ந்தாள். தண்ணிர்ச் செம்பை எடுத்து முதலில் பூமிநாதனிடம் கொடுத்தாள். ஸ்மரனை இழந் திருந்தவன்போல் எழுந்து கால்கள் சிக்கித் தடுமாற்றத் தோடு நின்ற பூமிநாதன். அந்தச் செம்பைப் பற்றியபோது அவன் கைவிரல்களையும் பற்றி, அந்தப் பற்றுதலில் சிலுர்த்துக் கைவிரல்கள் நடுநடுங்க, கடைசியில் அந்தச் செம்பு கை நழுவியது. நழுவிய துடிப்புடன் அவன் விலகினான் , திருதிருவென்று விழித்தான் ; நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.

“பரவாயில்லை. இன்னொரு செம்பு தண்ணிர் கொண்டாரேன்” என்று சொல்லி, மறுசெம்பை நீர் நிறைத்துக் கொணர்ந்து பூமிநாதனிடம் நீட்டினாள்