179
ஊர்வசி. உங்க மைண்ட் சரியில்லை போலிருக்கு’ என்று விழுங்கினாள்.
பூமிநாதனோ உமிழ் விழுங்கியவனாக அந்தச் செம்பைப் பத்திரமாக ஏந்திக் கொண் டான். கை கழுவினான், அருகில் நின்ற அம்பலத்தரசன் வசம் கொடுத்தான்.
“என்னவோ மாதிரி இருக்கீங்களே, என்ன விசேஷம், பூமிநாதன் ஸார் ‘ என்று கேட்டுக் கொண்டே கைகளைத் துடைத்தான் அம்பலத்தரசன்
‘ஒன்றுமில்லே, மயக்கமாயிருந்திச்சு, அவ்வளவுதான்!” “வாங்க, ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்க ” என்றாள் மூதாட் டி.
பூமிநாதன் முதலிலும், அதை அடுத்து அம்பலத்தரனும் உட்கார்ந்தார்கள்.
நெய் இரண்டு இலைகளையும் கமழச் செய்தது. ஊர்வசியின் அன்புக் கரங்கள் பட்ட நெய் அல்லவா ?
அம்பலத்தரசன் சாப்பிட்டுக் கொண்டே பூமிநாதனைப் பார்த்தான் அவன் சிந்தனை மூள, நெய்ச்சாதத்தைப் பிசைந்த மணியமாக இருந்தான்.
ஊர்வசி விழி விரித்துப் பூமிநாதனை நோக்கினாள். அவள் திருஷ்டியில் ஏன் இந்தச் சலனம் ? ம் சாப்பிடுங்க வில்லன் ஸார்’ என்றாள் அவள். அவள் குரலில் ஆணை ஒலித்தது. -
பூமிநாதன் தலையை உயர்த்தி ஊர்வசியைப் பார்த் தான்.
ஊர்வசியை தலையை தாழ்த்தி பூமிநாதனைப் பார்த் தாள். - -
பூமிநாதனின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணிர் வழிந்தோடிக் கொண்டேயிருந்தது. அடுத்த கைந்