பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 82

ஊர்வசி அவன் முன்னே குனிந்து உட்கார்ந்தாள் பூமிநாதனைத் தொட்டுத் தலையைத் தூக்கினாள் அப் போது அவனுடைய சட்டைப் பையிலிருத்த ஓர் அழகான தங்கத் தாலியும், ஏழெட்டு தூக்க மாத்திரைகளும் நழுவின. அவனை மீண்டுப் பார்த்தாள். அவன் இன்னமும் தன்னினைவுக் கொள்ளக் காணோம்!

“பூமிநாதன்! மிஸ்டர் பூமிநாதன் 1’ என்று பலத்த குரல் எடுத்துக் கூப்பிட்டாள்,

பூமிநாதன் கண்களை விலக்கினான். விரிந்த விழிகள் ஊர்வசியைப் வெறிக்கப் பார்த்தன. அப்பார்வையில் பரி தாபம்மோலோச்சியது. நோக்கு இறங்கியது. கீழே நழுவிக் கிடந்த அந்தத் தாலியையும், அந்தத் தூக்க மாத்திரை களையும் அவன் கையிலெடுத்தான். கண்ணிர் வெள்ளம் திரும்பவும் மடைதிறந்தது.

“ஊர்வசி இந்த தாலியை உனக்கென்று கொண்டாந் திருக்கேன் நான். இந்த என் முடிவுக்கு - பிராயச்சித்தத் துக்கு நீ சம்மதிச்சு எனக்கு வாழ்வு கொடு, உன்னோட முடிவு என்னைக் கடைத்தேற்ற ஒப்பலைன்னா, இதோ இந்தத் தூக்க மாத்திரைகள் எனக்கு நல்ல முடிவு காட்டக் காத்திருக்கும்’ என்று தேம்பலானான் அவன்.

- ஊர்வசி எழுந்து நின்றாள். அவைகள் எல்லாத்தை யும் என்கிட்டே கொடுங்க மிஸ்டர் பூமிநாதன்” என்றான் அவள். நா தழ தழத்தது.

அச்சம் கொழிக்க அவற்றை அவளிடம் நீட்டினான் பூமிநாதன்!

“பூமிநாதன்! எழுந்திருங்க. எழுந்திருச்சு சாப்பி

டுங்க...’ என்று அன்பு தோய்ந்து வேண்டினாள் ஊர்வசி. கண்ணிரும் புன்னகையும் கூடின.