183
பூமிநாதன் எழுந்து தன் இலையைக்கணித்து உட் கார்ந்தான். மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பாவம்’
‘வாங்க அத்தான், வந்து நீங்களும் சாப்பிடுங்க!”
அம்பலத்தரசனும் சாப்பிடத் தயாரானான். நீர்மணி கள் சிதறின.
அம்பலத்தரசனையும் ஊ ர் வ. சி ைய யு ம் புதிய
கண்ணோட்டத்தோடு பார்வையிட்டான் பூமிநாதன். அவன் கண்கள் பொடித்தன!
இரு விருந்தினர்களும் உணவு கொண்டனர்.
இருவருக்கும் மத்தியில் தாம்பூலத் தட்டை வைத்தாள்
ஊர்வசி. அம்பலத்தரசன் தாம்பூலம் தரித்துக் கொள்ளத் தொடங்கினான்.
“ஊம், நீங்களும் வெற்றிலைப் போட்டுக்கங்க. விருந்து சாப்பிட்டவங்க, வெற்றிலைப் போட்டுகிறது தான் நம் தமிழ்ப் பண்பாடுங்க, பூமிநாதன்’ என்றாள் ஊர்வசி. நயமான உரை.
இப்போது பூமிநாதனின் உதடுகள் சிவந்திருந்தன.
“சரி, இனி நீங்க புறப்பட வேண்டிய வேளை வந் திட்டுது! ஊம் சிளம்புங்க, மிஸ்டர் பூமிநாதன்!’
ஊர்வசி ஆணையிட்டாள்.
அவள் ஆணைக்கென்று இப்படியொரு தனி மகிமையா?
பூமிநாதன் பேய் பற்றியவன் போல தலைதெறிக்க ஒடத்தலைப்பட்டான்!
- ஊர்வசி
நேசம் தேம்பியது.