[5]
விடிந்தால், சங்கராந்திப் பண்டிகை :
வழக்கமாக வெற்றிலை போட்டுக் கொள்ளும் சமயங்களில் எல்லாம் சாம்பான் மனச் சந்துஷ்டியோடு இருப்பது பழக்கம். ஆனால், இப்போது, அவர் உள்மனம் வெகுவாகவே சலனம் கண்டிருந்தது. இனிமே, பொளுது பளார்னு விடிஞ்சதும்தான். தெவ்விப் பொண்ணைக் கண்டுதண்டிப் பேச வாய்க்கும் - கற்றாழை நார்க்கட்டில் உடலுக்கு இதம்பதமாகத்தான் இருந்தது! பனங்குளம் மாப்பிள்ளைக்காரன் வீரமுத்து, பெண்ணைக் கொடுத்த இந்த மாமனுக்காக நாலு நாழிகைப் பொழுது கை கடுக்கப் பின்னிக் கொடுத்தது அல்லவா அது ? - மகள் தங்கம்மா கருக்கலிலேயே வளமைப் பிரகாரம் குடும்பத் தோடு விருந்துக்கு வந்து விடுவாள் ! - பாசத்தில் கூடுப் பாய்ந்த நெஞ்சுக்குருத்து என்பியது ; தணிந்தது. நிமிர்ந்து குத்தினார் அவர்.
மங்கத்தா புகையிலைக் காம்பை கிள்ளி நீட்டுகிறாள்.
பூசாரிக்கு உணக்கை வந்தது.
‘ஒங்களைத்தானே! ஒரு சங்கதி ரோசிச்சுப் பார்த் திகளா ?”
“என்னடி புள்ளே ?”
“உங்களோட ஆகி வந்த கைராசிக் கையாலேதான் நீங்க தெய்வானை-வேலாயுதம் சோடிக்குக் கண்ணா லத்தை நடத்தி வச்சிங்க !
“அதுமட்டுமல்ல ; ஒரே நேரத்திலே, இன்னொரு சோடியான வள்ளி முத்தையனுக்கும்தான் கண்ணாலம் நடந்திச்சு !