பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


கணக்குத்தான். இது, கரணம் தப்பினால் மரணம் மாதிரியான விளையாட்டாக்கும் !’ என்று பேச்சைத் தொடங்கினாள் காட்டு ரோஜாத்தி தெய்வானை,

“ஆமாம்டி தெவ்விக்குட்டி ! நீ ஊர்நாட்டிலே அழகிலே மட்டும் ஒசத்தி இல்லே ; புத்திசத்தியிலேயும் நீ ஒசந்த வளாச்சே? நீதான் நமக்குள்ள சிக்கில் தீர ஒரு நல்ல வழியைக் காண்பிக்கோணும்படி”, என்று கெஞ்சிக் கொஞ்சினாள், வள்ளி.

வள்ளி, எம்மச்சான் முத்தையனுக்கு நான் மூணாம் பேருக்குத் தெரியாம ஒரு பரீட்சை வைக்கிறேன். அதிலே அவர் தேறி, இனிமேயாச்சும் அந்த ஆம்பளை திருந்திடு வாரா என்கிறதுக்கு உண்டான துப்புக் கொடுத்தால் சரி; இல்லாட்டி, அந்த ஆளைக் கைகழுவிப்புடுவேனாக்கும்! சரி, உன் கதை .காரணத்துக்கு வாரேன். நீ அன்பு பாராட்டுற வேலாயுதத்தைப் பத்தித்தான் அக்கம்பக்கத்திலே இன்னிக்கு வரைக்கும் அடாவடிப் பேச்சு ஒண்ணுமே மூச்சுப் பறியலையே! அந்த மட்டுலும் நீ கொடுத்துவச்ச குட்டி தான். உன் மச்சான் வேலாயுதம் இப்பவும் மனசும் புத் தியும் தடுமாறாம, நல்ல ஆம்பளையாவேதான் இருக்குது என்கிற சங்கதியை நீ புரிஞ்சுக்கிட்டு, நல்ல முடிவு கிடைச்சிட்டால், நீ உன் நேசக்காரன் வேலாயுதத்தை உன்கனாப்படி நீ கண்ணலாம் கட்டிக்கிடலாமே ?'என்றாள் தெய்வானை,

காதலுக்குத் தேர்வு நடந்தது.

தெய்வானை மோகினி அவ த | ர ம் எடுத்தாள்; முத்தையனைச் சோதித்தாள்.

முத்தையன் நயமாகவே சிரித்தான். தெய்வானைப் புள்ளே! நீ ஆளான மாசி மாசத்திலே, உம்மேலே ஆசை வச்சேன் நான்! ஆனா, நல்லவனான என்னோடகண்ணை