பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


விதி நடுவிலே மறைச்சிடுச்சு எனக்குக் கெட்ட புத்தி வந்துடுச்சு. நான் கெட்டுப்போனது பொய் இல்லே!’, ஆனா, இப்ப நான் மிருகம் இல்லே; மனுஷன்! நல்ல வனாகத் திருந்தியதுக்கு, நீ எம்பேர்லே வச்சிருந்த நம் பிக்கெதான் காரணம்! என்னை மனப்பூர்வமா நீ நம்ப லாம்; தெய்வானைக் கண்ணே!’ என்று கூறிக் கண்ணிர் வடித்தான்.

தெய்வானை ஆத்தாளை ந ன் றி யோ டு நினைத்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்தாள்.

அது போலவே.

வள்ளி, தனக்கு உரியதான நேசப்பரீட்சையைத் தன் பங்கிற்காகவும் நடத்தினாள். திரை மறைவில் நின்று ஒரு நாடகத்தைப் போட்டாள்.

‘ஏ புள்ளே வள்ளி! நான் நல்லவன். நல்லவன்தான்; குடி, கூத்தி எதுவுமே இப்பிறப்பிலே என்னைக் கெட்ட வனாக ஆக்கிப்புடவே முடியாது!’ என்று சவால் விட் டான்; வேலாயுதம்.

வள்ளி ஆனந்தக் கூத்து ஆடினாள்.

தோழிமார்கள் தெய்வானை, வள்ளியின் திருமணங்

கள் சேசியிலேயே நிச்சயிக்கப்பட்டன

தெய்வானை - முத்தையன், வள்ளி - வேலாயுதம் கலியாணங்களுக்கான பரிசமும் நடந்து, தேதியும் வைக்கப் பட்டது.

அந்நேரத்திலேதான், எதிர்பாராத அச்சம்பவம் நடந்

தது. சேரியையே உலுக்கிக் குலுக்கிய நடப்பு ஆயிற்றே அது?

இ - 2