24
பூசாரி சாம்பான் திடுக்கிட்டார் , தெய்வானைப் பொண்ணே ! நில்லு ! நில்லு என்று ஒலம்பரம்பினார்
தெய்வானை நிற்கவில்லை ; நிலைக்கவும் இல்லை.
அம்மன் இப்போதும் சிரித்தாள் ; சிரித்துக் கொண்டே இருந்தாள் ஆத்தாளே !’ -
மறுபடியும் ஒலமிட்டாள் தெய்வானை. உள்ளம் அதிரவும், உடல் அதிரவும் கதறினாள். தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு கதறினாள், - மங்கலத்தாலியும் அலறிக் கதறியது மறு இமைப்பில் ஆத்தாளின் பாதார விந்தங்களில் சரண் அடைந்தாள். திருமாங்கல்யம் புடை சூழ, நித்திய கமங்கலியாகவே தரிசனம் தந்த ஆத்தாவின் காலடியில் படீர் படி'ரென்று முட்டிக் கொண்டாள். மோதிக் கொண்டாள்.
பீறிட்டது ரத்தம்.
வீறிட்டது ரத்தம்.
“ஆத்தாடி, தெய்வானைப் பொண்ணே !”
அலறிப் புடைத்துக் கொண்டே பாய்ந்தார் சாம்பான் பூசாரி, தெய்வானையை கையைப் பிடித்துத் தடுத்தார்.
தெய்வானை கேட்டால்தானே ? -
அவள் தெய்வானைதானா ?
இல்லை. -
எல்லைக் காளியாக ஆகி விட்டாளா இந்த தெய்வானை ?
ரத்தம் பீறிட்டுக் கொண்டே இருந்தது.
மறுகணம்.