பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


“ஆத்தாளே, தெவ்விக்குட்டியா’ என்று மண்ணும் விண்ணும் முட்ட ஒ ங் கா ர ம க ஓலமிட்டவராகத் தெய்வானையின் பாதங்களிலே விழுந்தார் சாம்பான் பூசாரி.

“ஐயையோ - பெரியவுகளே !’

தெய்வானை பதறித் துடித்தவளாகப் பெரியவரின் கைகளைப் பற்றித் தூக்கி நிறுத்தி விட்டுக் கையெடுத்துக் கும்பிட்டாள். உதவாக்கரைச் சின்னப் பொண்ணுங்க நான் அய்யா நீங்க இந்தப் பாவியோட காலிலே விளுந்திட்டீங்களே ? இந்தப் .ெ பா ல் லா ப் பாவம் ஆத்தாளுக்குக்கே கூட அடுக்காதுங்களே ‘, என்று வெடித் தாள். ரத்தத்துளிகள் விழி முனைகளினின்றும் வெட்டிப் பாய்ந்தன.

சாம்பான் சிரித்தார் ; வேதனை தாளாமல் சிரித்தார் சிரித்து விட்டு விம்மத் தொடங்கினார்.

“ஐயா.ஐயா ! நீங்க அழப்படாதுங்க. நான் ஒருத்தி அழுவுறது போறாதுங்களா.

மூத்தவரின் விழி வெள்ளத்தைத் துடைத்து விடுகிறாள் தெய்வானை.

தெய்வானையின் தங்கக் கரங்களை எடுத்துக் கண்களிலே ஒற்றிக் கொண்டார் பூசாரி. “தெவ்விப் பொண்ணே ! நீ எம்புட்டுக் கண்ணிரைத்துச் சடுதியிலே துடைச்சுப்புட்டே ஆனா, என்னாலே தான் உன் கண்ணிரைத் துடைக்க முடியாமலே போயிடுச்சு ! நான் பாவி நான் முன்னே நின்னு தீர்ப்புச் சொல்லி, அந்தப் படுபாவி மிருகம் வேலாயுதத்துக்கு உன்னைக் கட்ட வச்சேனே ? இப்ப, நானும்தானே உன் பாவத்துக்கு ஆளாகிப் புட்டேன், தெய்வானைப் பொண்னே !! - புலம்பினார்.