27
நோம்பு இருந்தேன்! ஆனா, ஒண்னுங்க : மிச்சம் மீதம் இருக்கிற என்னோட ஆயுள்கால வாழ்க்கைக்கு இனிமே இந்தத் தாலி மட்டும்தான் எனக்குச்சதம் இந்தத் தாலி மாத்திரம்தான் இனி எனக்குத் துணை ! ஆமா, சொல்லிப்பூட்டேனுங்க, பெரிய ஐயாவே !”
தெய்வானை பேச்சை நிறுத்தினாள். மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.
பெரியவர் சாம்பான் வாய் அடைத்துக் கதிகலங்கிய நிலையில் மலைத்து நின்றார், ஆத்தா அங்காளம்மையை ஆற்றாமையோடு பரிதாபமாகப் பார்த்தார். ஆத்தா, இதுதான் உன்னோட முடிவா, என்ன ? நீ காண்பிக்க வேண்டிய நல்ல பாதை இதுவே தானாடி, ஆத்தாளே?” உச்சாடனம் பெற்றவராகக் கூச்சலிட்டார், பூசாரி.
தெய்வானை விழிகளை நெற்றிக்கு உயர்த்தினாள். நெற்றிக் கண்ணைத் திறக்கப் போகிறாளா ?
“ஐயாவே! ஆத்தா நல்ல புண்ணியவதி நான் செஞ்ச பாவத்துக்கு அவளை - ஆத்தாளை ஏசப்புடாதுங்க: அது தர்மமும் ஆகாதுங்க! கெஞ்சுகிறாள் தெய்வானை.
பூஜாரி சாம்பான் சிலையானார்.
வள்ளி தவித்தாள்.
வள்ளியின் அன்பு மச்சான் முத்தையன் திகைத்தான்.
சேரி மக்கள் ஏங்கினர்.
அடுத்த நொடியிலே -
- எந்தெய்வமே!’