பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

” ; , از مه

அடிக்கிறதாட்டம் அடுச்சு நொறுக்கிப் போட்டியே ? அதை நான் மறந்தாலும், எ ன் ேண | ட கன்னத் தழும்புங்க மறக்கவே மறக்காதே? . ஐயையோ, பாவி நீ! பாழாய்ப் போன மிருகம் நீ!’

தெய்வானை, கட்டுமீறின. வெஞ்சினத்தைத் தாள மாட்டாமல் பற்களை நறநற வென்று. கடித்துக் கொண் டாள். பற்களுக்கு இடையிலே நசுங்கின ஆத்திரம் பேய்ச் சிரிப்பாக மாறியது. .

வேலாயுதம் உயிர்க்குலை நடுங்கத் துடிதுடிக்கலானான் ‘ஏ, புள்ளே! நான் இனிமே ஒருநாளும் மிருகமாக ஆகிப்

புடவே மாட்டேன்! என்னை நம்பு. தெவ்வி, நம்பு!” தொண்டை அடைக்கச் செருமினான், ஆண்பிள்ளைச் சிங்கம் ,

பாய்ந்து வந்த தெய்வானை, முகத்திலே எள்ளும் கொள்ளும வெடிக்க வேலாயுதத்தின் சட்டையைப் பற்றி யவளாக, நீ இனிமே மிருகமாக ஆக மாட்டேங்கிறதுக்கு நான் மன சொப்பி நம்புறதுக்கு என்னா சாட்சி வச்சிருக் கியாம்?’ என்று கேட்டாள். -

விதிக்குக் கேள்வியையும் கேட்கத் தெரியுமோ ;

வேலாயுதம் விழித்தான்; ஆடு திருடிய கள்ளனாக விழித்தான்!

தெய்வானை தீப்பொறி பறந்திட, விழிகளை ஏறிட்டு

உருட்டினாள்.

நீ எப்பவுமே வெறும் மிருகந்தானாக்கும்! இப்பைக்கு என்னமோ துளியத்தனை மனுசத்தனம் சிலுப்பிக்கிட்டு உம்மனசிலே எழும்பியிருக்குது. அதனாலேதான் நீ இனிமே மிருகமாக ஆகமாட்டேன்னு வாயடி அடிக்கிறே! ஆனாலும் உம் பேச்சை நம்புறதுக்கு உண்டான ஆதாரத்தை உன்