பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i

நெருங்கினான். நேருக்கு நேராக அவள் எதிரிலே வந்து நின்றான். கண்களை மறைத்த சுடுநீரைக் கைவிரல்களால் வழித்துவிட்டுக் கொண்டே அவளை விழுங்கி விடுபவனைப் போல ஏறிட்டு ஊடுருவினான். அவன் முகம் ஏன் அப்படி மாறி வருகிறது ?- தெய்வப்புள்ளே ! இனிமே என்னை ஏசிப் பேசறதுக்கு ஒனக்கு வாய்வார்த்தை தட்டுப்படலையங் காட்டி? அதாலேதான் உன்னோட வாய் ஒய்ஞ்சிருக்கா? பேசியவன், பேச்சை நிறுத்தி விட்டு, மூச்சையும் நிறுத்தி விடாமல் மீண்டும் அவளைக் கோபம் கொந்தளிக்க நோக்கினான்.

பூசாரி சாம்பன் தவித்தார். ஆத்தாளே! வெள்ளம் தலைக்கு மேலே போயிடாமல், ஒரு நல்ல திருப்பத்தைத் தந்திடு ! -

வள்ளி என்ன நடக்கப் போகிறதோ, ஏது நடக்கப் போகிறதோ என்கிற துப்புப் புரியாமல் கிலேசம் கொண்டு தடுமாறினாள், ஊர் நாட்டிலே இருக்கிற நாலுபேர் மாதிரி நல்ல பு ன் வளி ய ா க த்தானே வேலாயுதம் மச்சான்காரரும் இருந்துச்சு? என்னமோ போதாத காலம் ஏழரைச் சனி பிடிச்சுக்கினு ஆட்டிப்படைச்சி, இப்ப அலங்கோலம் ஆகிப்புடுச்சு, பாவம்!-இல்லாட்டி அந்த நாளையிலே எம்பேரிலே கொண்டிருந்த மசக்கத்தை மறக்காமலும், என்னையும் மறந்திடாமலும், என்னையே சுத்திச் சுத்தி வந்து தன்னோட அருமைப் பொஞ்சாதி தெய்வானைப் பொண்ணை ஏமாற்றம் தாளாமல் சதா அடிச்சு நொறுக்கிக்கிட்டே நேத்து வரைக்கும் கூட, பித்துப் புடிச்சு அலைஞ்சு திரிஞ்சுக்கிட்டு இருந்திருக்குமா? நெஞ்சின் ஈரத்திலே சிலிர்த்தவளாகி, நிலைகுலைந்தாள்.

வள்ளியின் நேசமச்சான் முத்தையன் தீயை மிதித்த பாங்கிலே, துடித்தான். கட்டின பொண்டாட்டிக்கு உடம்பாலேயும் உள்ளத்தாலேயும் துரோகம் நினைக்கிறது. பாவத்திலேயும் பாவம் பெரும் பாவமாக்கும்னு நானும்