34
ஒரு அர்த்தத்தைக் குடுக்கிற என்னோட பூவும் பொட்டும் மஞ்சளும் கலைஞ்சிப்புடுறதுக்குள்ளாறவே, நீ உங்கிட்டே அழைச்சிக்கிடுடி, ஆத்தாளே!’
அலறிக் கதறினாள் தெய்வானை, மறு இமைப்பில், அவள் - தெய்வானை மண்ணிலே வேர் அறுந்த சந்தன மரமாகச் சாய்ந்து விட்டாள் வாயில் துரை கக்கியது. அவள் தலைமாட்டிலே, சிவப்புக் குன்றிமணிகள் சிதறிக் கிடக்கின்றன. இப்போது !
அதே நேரத்தில் :
“ஐயோ, எந்தெய்வமே ! சத்தியமாகவும் தருமமாவும் மெய்யாலுமே ஒரு மனுசனாகத் திருந்திப் பூட்ட என்னை ஒரு மனுசனாகவே நம்பியும் மதிச்சும் ஏத்துக்கிடாமலே, நீ இப்படி என்னையும் முந்திக்கினு மண்ணிலே சாஞ்சுப் பூடுவேன்னு நான் சொப்பனத்திலேகூட நினைக்கலையே? ஐயோ, எந்தெய்வமே எந் தெய்விப்புள்ளே !??
வேலாயுதம் ஒலம் பரப்பியவனாகத் தரையிலே வீழ்ந் தான்!- அவன் காலடியிலும் அதே சிவப்புக் குன்றுமணி கள் சிந்திச் சிதறின வாயில் பீறிட்ட நுரைத்துளிகளும் சிந்தின; சிதறின !
“ஆத்தாளே! என்னா புதுசான சோதனை இது!” சாம்பான் பூசாரி கூக்குரல் எழுப்பினார்.
. வள்ளியும் முத்தையனும் ஜோடி சேர்ந்து அலறினார் கள் ; கதறினார்கள்.
நாய்க்கூட்டம் ஊளையிட்டது.
மனிதக் கூட்டம் தவித்தது.
வேலாயுதத்தின் நெஞ்சைத் தடவிக் கொடுக்கிறாள் வள்ளி, - .