பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


வேலாயுதம் ஆனந்தப் பரவசத்திலே மெய்மறந்து அழு கிறான். அருமை பெருமையான தெய்விப்புள்ளே ! நான் எப்பவுமே நன்றிக் கொண்ட மனுசனாகவே இருந்துப் புடறேன் மிருகமா இருந்தவனை மனுசனாக மாத்தின நீ தெய்வமாக ஆத்தாளாக எனக்கு ஆத்தாளாக இருக்க வேண்டியது தான் நாயம் ! அதாலே தான், இங்கே ஒரு ராமனும் தீக்குளிச்சுட்டேன். ஆனாலும் நான் ...

தெய்வானை நீங்க என் வரையிலே எப்பவுமே ராமர் தான் என்றும் விம்முகிறாள்.

மனிதர்கள் மகிழ்கிறார்கள்.

சாம்பான்பூசாரி ஆனந்தக்கூத்து ஆ டு கி ற ார், ஆத்தாளே அ ங் கா ள ம் ைம | இந்த வேலாயுதம் தெய்வானையை ஜோடி பிரியாமல் ஜோடி சேர்த்து வச்சு, என்னோட நல்ல கவுரவத்தை நல்லபடியாவே கட்டிக் காப்பாத்தி தந்திட்ட மகராசி நீ ஆச்சே, ஆத்தாளே! விம்மினார் பெரியவர்.

விதிக்கும் விதியான உலகாளும் தாய் அங்காளம்மன் இப்போதும் சிரிக்கிறாள், சிரிக்கிறாள் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்! - -

(முற்றும்)