40
காட்டு வெளியிலே குறுக்கு மறிக்க வச்சியாம்? ஐயையோ, நான் வச்ச சவாலை நம்பியும் மதிச்சும் எனக்காகக் காத்துக்கிணு இருக்கிற என்னோட ஆசைக்கிளி அன்னக் கிளி, என்னோட சவாலிலே நான் கெலிச்சடியும் என்னைக் கொண்டுக்கிடத்தவம் கெடந்துக்கினு இருக்கிற இந்த நேரத்திலே, நானு பாவி ஆகிப்புட்டேனே ?- பழிகாரனாகிப் பூட்டேனே! நானு இல்லாங்காட்டி, என்னோட நேசக்கிளி அன்னக்கிளி அப்பாலே இந்த மாங்குடி மண் ணிலே உசிர் தரிக்கவே மாட்டாதே? ஊருக்கு ஒசந்தவளே, இந்தத் துப்பு ஒம்புத்திக்கு எட்டவே இல்லையாடி ........?
முத்துச் சிரிப்பென, கூன் பிறை கண் சிமிட்டத் தலைப்படுகிறது.
வேப்பமரம் பளிச்சிட்டது !....
அவன் ஓலமிட்டான்; "அன்னக்கிளியோ!"
அன்னக்கிளி !.....
அவள் பூவாக மலர்ந்து, பூவின் புனிதமாக நிமிர்ந்து பூமணமாகத் தன் அழகை வாரி வாரி வழங்க ஆரம்பித்து விட்டால், அன்னம் அதிர்ச்சியால், அதிசயத்தால் அப்படியே மலைத்து சிலையாகி விடாதா ? - அவளுக்கு முன்னே தான் எம்மாத்திரமென்று கிளி வெட்கமடைந்து வாய டைத்துப் போய் விடாதா?
அன்னக்கிளி !
பருவத்திற்குப் பதவுரை அவள் !
அன்னக்கிளி!
அவள் நாணயத்தின் செலாவணி !
அன்னக்கிளி !
நாணத்திற்கு விதி அவள்!
அன்னக்கிளி