42
“மச்சானே, மச்சானே நூறுகடுத்தம் கிளிக்குப் படிக்கனே புட்டுப் புட்டுச் செப்பியும் கூட, இந்தப் பாளத்த புள்ளே பாடத்தை மறக்கவே மாட்டீங்க போலி ருக்கே ?- ஊரறிய, ஆயி மகமாயி அறிய, ஒரு நல்ல பொளுதிலே நீங்க ஒங்க கையினாலே எங்களுத்திலே எண்ணி மூணு முடிச்சுப் போட்டதுக்குப் பொறகால தான் நீங்க என்னை புள்ளே அப்படீன்னு கூப்பிட வாய்க்கு மாக்கும்!”
“ஒ அம்புட்டுத்தானாங்காட்டி’
ஊம்!’
காணாத அதிசயத்தைக் கண்டு விட்ட பாங்கில், அவன் கை கொட்டிச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவனுடைய மனப்பலம் பக்குவமாக முகம் பார்த்துக் கொள்ளத் தவறி விடவில்லை. அவனுக்கு அவன் வைத்த சோதனைகள் ஒன்றல்ல; இரண்டல்ல!
- மச்சானே!’
- 4 t?”
‘பேச மாட்டிங்களாங்காட்டி?” “ஊக்கூம்!”
1 ரனாம்?’’
‘நீ மட்டுக்கும் என்னை “மச்சான் முறை கொண்டா டலாமாக்கும்? நீ என்னைக் கொண்டுக்கிட்டதுக்கப்பாலே தானே, “மச்சான் அப்படின்னு என்னை அழைக்கலாம்!”
“நான் தான் ஒங்களைக் கொண்டுகிடப் போறேனே?கட்டிக்கிடப் போறேனே?- நான் மச்சான்னு தான் ஒங்களை அழைப்பேன். ஆனா; நீங்க என்னை புள்ளே’ முறை கொண்டாடி விளிக்கோணுமின்னா-நீங்க என்னைத்