பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


தொட்டுத் தாலிகட்டி - திருப்பூட்டி, பொஞ்சாதி என்கிற சொந்தம் வச்சு 'புள்ளே' அப்படீன்னு விளிக்கோணு மின்னா, இன்னம் ஒரேயொரு சங்கதியிலேயும் நீங்க கெலிப்புக் காட்ட வேணுமாக்கும்!”

"எனக்கு நீ என்னமோ சோதனை வச்சே!- குந்த நிழலைத் தேடிகிடச் சொன்னே; தேடிக்கிட்டேன்; உழைக்க மண்ணைத் தேடத் சொன்னே; அதையும் கண்டு தண்டிக் கிட்டேன்; ஊர் மெப்பனைக்காக, நாலு காசைச் சேர்த் துக்கிடவேணும்னு ச ட் ட ம் போட்டே, சேர்த்துக் காட்டினேன்; கள்ளுத் தண்ணியை நாடப்புடாதீன்னு விதி வச்சே, அந்தச் சங்க நாத்தமே கெடையாதின்னு முச்சரிக்கை எழுதிக் குடுத்தேன்; ஊர் நாட்டிலே ரோக் கியமானப் புள்ளின்னு நல்ல பேர் எடுக்கோணும்னு புத்தி சொன்னே; நல்லவன்னு பேரெடுத்தேன்! இன்னம் என்ன செய்யோணும், அன்னம்?”

"மச்சானே!”

" ஊம்! "

“நீங்களும் நானும் நம்பளுக்கு உண்டான தடைங் களையெல்லாம் தாண்டிக் கடந்து, எதிர்த்து மல்லுக்கட்டி, நாம ரெண்டு பேரும் புருசன் - பொண்டாட்டி ஆக வேணும்னு ஒரு நல்ல முடிவுக்கு வந்தடியும், நான் ஒங்களை ஒரு கேள்வி கேட்டேனுங்களே, யாபகம் இருக்குங்களா, மச்சானே?”

“ஆமா; இது பரியந்தம் நான் மற்றெந்தக்குட்டியையும் தொட்டதும் இல்லை; தெரட்டு அனுபவிச்சதும் இல்லே அனுபவிச்சுச் சுகம் கண்டதும் இல்லே என்கிற சத்தியத்தை யும், தருமத்தையும் ஒன்னோட கேள்விக்கு விடையாகச் சொன்னேன்!"