45
அந்தக் கஞ்சிப் பொழுது, மெல்ல மெல்ல, மெள்ள மெள்ளக் கால்பாவி நடந்தது. .
அந்திசந்தி வந்தது.
மன்மதனுக்கு ரதி ஒருத்திதான்!
ஆனால் முத்துலிங்கத்தைக் கைப்பிடியாகப் பிடித்துக் கன்னி வலையில் வீழ்த்தித் தள்ளிவிட கூத்துப் போட்டனர் ஆளான பெண் சிட்டுக்கள் அலமேலுவும் அஞ்சலையும்.
முத்துலிங்கத்துக்கு அன்ன கிளி ஒருத்தியே தான் ஊர் உலகம் எல்லாம்!
அன்னம்தான் அவனுக்கு உயிர்.
அன்னக்கிளியிடம் வைத்த சவால் தான் அவனுக்கு எதிர்காலம்.
அவன் - முத்துலிங்கம் வெற்றிப் பெருமிதத்தோடு, மனிதனாக மனிதாபிமானம் பெற்ற மனிதனாகத் தலை நிமிர்ந்து நின்றான்.
இரவு வந்தது.
இனிமே, என்னை எவ மயக்கிச் சாய்ச்சி மண்ணைக் கவ்விப்புடச் செய்ய ஏலும்? மோகினி அவதாரமா ஒரு பூலோக ரம்பையே வந்து குதிச்சாலும், நான் என்னை இழந்துப்பூடவே மாட்டேன்; என்னோட கற்பு நெறியை எம்பூட்டுப் பரிசுத்தத் தவத்தை எ ன க் கு உண்டான ஆண்மைச் சொத்தை ஒரு நாளும் களவு கொடுத்துப் புடவே மாட்டேன் மனசு கொண்டது மாளிகைன்னு எங்க மேலத் தெரு நொண்டி அப்பத்தாக்காரி நொடிக்கு நூறு கடுத்தம் செப்பும், என்னோட மனசான மனசு என்னோட கனவுக்கிளியான அன்னக்கிளிக்கேதான் சொந் தம் !- ஊருக்கு ஒசந்த போத்தக் குடி மாணிக்கம், குள