பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

‘ஐயையோ!.. என்னோட ஆசைக்கண்ணாட்டியான அன்னக்கிளியைக் கண்ணாலம் கட்டிக் கொண்டுக்கிட்டு, அவளை என் பொஞ்சாதியாய் அனுபவிக்கிறதுக்கு உரித் தான ஒரு பொசிப்பும், லவிதமும், பாக்கியமும் இல்லாமப் பூட்ட பாவியான எனக்கு, என்னோட பாவத்துக்குநான் செஞ்ச பாவத்துக்கு உண்டான கூலியைச் செலுத் துறத்துக்கு உள்ள நேரம் நெருங்கிக்கிட்டிருக்குது ! பாவியிலேயும் பாவி, கேடு கெட்ட பாவியான என்னை இனியும் பூமித்தாய் தாங்கமாட்டா ; தாங்கவே மாட்டா!’

கூலியை - பாவத்தின் கூலியைச் செலுத்தக் கயிறு வேண்டாமா ?

வேண்டும் ! - வேண்டும் !

என்னவோ உறுத்திற்று.

மனச்சாட்சியாக இருக்குமோ?

பிறைச்சிதறலில் இடுப்பில் செருகப்பட்டிருந்த கயிறு தட்டுப்பட்டது.

அவன் சிரித்தான்.

அவன்: முத்துலிங்கம்.

இன்னும் யார் சிரிப்பது ?

கயிறா சிரிக்கிறது ?

கயிற்றுக்குச் சிரிக்கத் தெரியுமோ?

விதிக்குச் சிரிக்கத் தெரிவது இல்லையா ?

முத்துலிங்கம் எப்படிச் சிரிப்பான், பாவம் ? ...

பாவம்! . . . . . .

பாவமாவது, புண்ணியமாவது!