48
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ! ஐயையோ ஆத்தாடியோ!’
கைப்பிடிக்கயிறு பூநாகமாக நெளியவே. அவன் ஓ’ வென்று ஓலமிட்டான். இத்துணை நாழிகைக்கு அக்கயிறு கை நழுவிப் போய்விடாமல், காலைச் சுற்றின பாம்பென எப்படித்தான் அவனிடம் பாசமாகவும் நேசமாகவும் தப்பி யதோ? உருவி எடுத்தான் ; கைக்குச் சுளுவிலே எட்டி விடாத கிளையொன்றைக் கணித்து, அந்தக் கயிற்றை வீசினான். கால்களைத் தூக்கி எம்பி எகிறி நின்றால், அழும்பு பண்ணாமல், வீம்பு புடிக்காமல், வம்பு பிடிக் காமல் கழுத்திற்கு லகுவாகவே எட்டி விடும்படியான அளவிற்கு அதைச் சமட்டியாக இழுத்துச் சரி சேர்த்துச் சரி பார்த்துச் செம்மைப் படுத்தலானான். பலே - அந்தப் பிடிகயிறு, பிடிக்குக் கட்டுப்பட்ட மோகினிப் பிசாசாகக் கனகச்சிதமாகவும் அமைந்து விட்டதே !
அந்தக் கயிறு இப்போதுதான் விதியொத்து நமட்டுச் சிரிப்பை நைச்சியமாக வெளிப்படுத்தத் தொடங்குகிறது.
சாமானியமான கயிறா அது ?
பாசக்கயிறு !
நேசக்கயிறு !
என்னமோ, இருந்திருந்தால் போலே கனைப்புச் சத்தம் ஒன்று கேட்கின்றதே? நரிப்பண்ணைக்கும் பாழாய்ப்
போன மனிதாபிமானம் இல்லாத இந்த மனித மந்தை மாதிரி கனைக்கத் தெரிந்துவிட்டது போலிருக்கிறது.!
சுற்று முற்றும் பார்த்தான் அவன். சுற்றிச்சூழவும் பார்வையிட்டான் அவன். அவன்: முத்துலிங்கம் ஆயிற்றே!
யாரையும் காணோம்! .