பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


குறி வைத்துப் பறந்து வந்து வட்டமடிக்கிறது சாக்குருவி ஒன்று.

சிணுங்கல். அழுகை மீண்டும் தூள் பறக்கிறது: ஏ, புள்ளே! ‘புள்ளே, அப்படின்னு உசிருக்குசிரான என் அன்னக்கியை ஒண்டியுந்தான் சொந்தம் கொண்டாடி அழைக்கோணும்னு நான் ரோசத்தோடவும் மானத்தோ டவும், வைராக்கியத் தோடவும் நினைச்சேன்; கனாக் கண்டேன்; தவம் செஞ்சேன். ஆனா ஊரு பேரு தெரியாத ஒன்னை - உருவம் கிருவம் தெரியாத ஒன்னை -உள்ளம் கிள்ளம் தெரியாத ஒன்னைத் தான் 'புள்ளே' அப்படின்னு கூப்பிடுறதுக்கு எந்தலையிலே எழுதிப்போட்டிருக்கு, அந்த எழுத்தைத் திரிகரண சுத்தியோட கையெடுத்துக் கும்பிட வேண்டியவன் நான். என் வ ைர க் கு ம் ஒசத்தியான புண்ணியவதியாக்கும்! ஒன் புண்ணியம் என் பாவத்துக்குப் பரிகாரம் செய்ய ஏலாதுதான்.

நாணு மகாபாவி! - தேவலோகத்துப் பாரி மாதப் பூவு தான். பூவிலேயே ஒசத்தியானதின்னு நான் செல்லையா அண்ணாச்சி சாயாக்கடையிலே வாசிச்சிருக்கேன். அப்படிக் கொந்த ஒசத்தியான ஒன்னை எச்சல்துப்பிக் காயிற ரவை நேரத்துக்குள்ளாற சசக்கி மோந்து காலடியிலே போட்டு நசுக்கிப் பூட்டேனே பாவிநான்? - தேவதை கணக்கிலே நீ எனக்குத் தரிசனம் கொடுத்தே! - வானத்துத் தேவதை அல்பத்தனமான வெறும் மனுசனான எனக்குக் கெடைக் கிறது லேசா? - அதாலதான் எ ம் பு த் தி யான புத்தி ஆண்மைத்தனமான எம்புத்தி சத்திமருள் கொண்டு பூடுச்சுப் போலே! - அதோட, நீ மோ கி னி ப் பேயாய் நின்ன அந்தக் கோலம் எம்புட்டுப் பருவக்கிளர்ச்சியைத் தூண்டி விட்டுச்சு; அப்பத்தான் நீ இருட்டுக் கம்மாயிலே தலை முளுகிட்டு வந்திருக்க வேணும்: ரவிக்கை ஒம்மேனியிலே இல்லே, ரவிக்கை போடவேண்டிய லக்கிலே, ஈரச்சேலை ஊடாலே, சொக்கப் பச்சை நிறத்திலே தரிசனம் தந்த