பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


அவன் : முத்துலிங்கம் ! திடீரென்று என்னவோ சிரிப்புச் சத்தம் கேட்கிறதே? விதிக்குச் சிரிக்கத்தான் தெரியும்.

அவனுக்கோ அழத்தான் தெரிகிறது. திசைகள் மாறின; மறுகின. சிரித்தது யார் ?

விதியே தானா ? அந்த விதி எங்கே ? யாரையுமே காணோம் !

இப்போது அவனும் சிரிப்பைக் கக்கத் தலைப்படுகிறான்!

முட்ட நனைந்த பின் முக்காடு எதற்கென்றா? .

சுருக்குக் கயிறு அதோ, அவன் கழுத்தை இறுக்கி முறுக் கத்தயாராகி விட்டது !

அவன் உந்திக் கமலத்திலிருந்து அழுதான். மனத்தின் அழுகையில், கண்களினின்றும் புதுவெள்ளம் பெருகியது; பெருக்கெடுத்தது. சுடுநீர் அல்லவா? சுடாதா, பின்னே ? ஏலே, புள்ளே! எம்புள்ளே அன்னக்கிளியோ! தூண்டில் புழு இப்படித்தான் துடிதுடிக்குமோ ?

மகமாயி

ஒன்று.

இரண்டு!

மூன்று!...

- ** أبي هة

அவன் வீரிட்டான்.

அவன், முத்துலிங்கமேதான் !