பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


தூக்குக் கயிறு அ று, ப ட் டு மண்ணில் விழுந்தவன் ஏறிட்டுப் பார்த்தான்.

சிறையினின்றும் விடுதலை பெற்ற பிறைக்கன்னி வெகு சுதந்திரமாக ஒளியை உமிழத் தொடங்கி விட்டது.

‘ஆ ! நீயாங்காட்டி ?”

நாணயக் குறுக்கலாகப் பூஞ்சிரிப்புச் சிதறுகின்றது ! அன்னக்கிளிப் பொண்ணே !’

“ஊம்! ...” அவிழ்ந்து தொங்கி இடுப்பைத் தொட்ட கூந்தலுக்கு நடுவிலே, அவன் வதனம் முகிலிடைப் பிறைத் துண்டமென ஒளிர்ந்தது.

கூதல் :

விழுந்தவன் எழ வேண்டாமா ?

எழுந்தான்.

ஆனால், அவனது மீசையிலே மண் ஒட்டவில்லை ! அவன் : முத்துலிங்கம்.

பதட்டம் மூள எழுந்தவன், தட்டித் தடுமாறிய வனாகக் கால்களைத் தரையிலே ஊன்றிக் கொள்ள முயற்சி செய்தபோது, நிதானம் தப்பி, அன்னக்கிளியின் மார்பிலே சாய்ந்து விட்டான். ஐ5:யயோ!’ என்று வீரிட்டு அலறினான் , ஆடிப் புனலாய்க் கண்ணிர் ஒடத் தலைப்பட்டது. சுடுநீர் அது ? சுட்டுப் பொசுக்கியது. திரை விரித்த விழி வெள்ளத்திற்கு ஊடே, அவளது பூக்கரங்களில் சுழன்ற தாம்புக் கயிறு சுழல்கிறது. அவன் தவித்தான் ; தடுமாறினான் ; உருகினான்; உருக்குலைந் தான். ‘ஆ ! நீயா ?. அன்னக்கிளிப் பொண்ணே ; நீயா;’ என்று கூப்பாடு போட்டான். வாசனை ஏறியிருந்த நாசித் துளைகள் புடைக்கின்றன.