58
அழுகை பாளை வெடிக்கிற பாவனையில் வெடித்துச் சிதறுகிறது.
அன்னக்கிளி விம்முகிறாள்.
நெற்றித் திட்டில், ரத்தத்தின் பிசிறு, நெற்றிப் பொட்டெனப் பளிச்சிட்டது.
முத்துலிங்கத்திற்குப் பித்து பிடித்து விட்டதா, என்ன? எட்டிப் பாய்ந்து, அன்னக்கிளியை ஒட்டி நெருங்கிய வனாக, அவளுடைய குழல் கற்றைகளை வாரி அள்ளி நுகர்ந்தான். “ஐயையோ?” என்று விண்ணும், மண்ணும் அதிர்ந்து குலுங்கிடக் கூக்குரலிட்டான்”
தாராடிக் கோயிலும் அதிர்ந்திருக்குமோ ?
- அன்னக்கிளிப் பொண்னே !”
அவன் கதறினான்.
‘அன்னக்கிளிப் புள்ளேன்னு கூப்பிடுங்க, மச்சானே!”
அவள் விம்மினாள். -
முடிச்சவிழ்ந்த கொட்டடி ரவிக்கையிலும் சுங்கடிச் ரத்தக்கறை மின்னுகிறது!
நரிகள் சிணுங்கின.
நெஞ்சோடு நெஞ்சம் தழுவி, முகத்தோடு முகத்தைச் சேர்த்துக் கெஞ்சியும் கொஞ்சியும் அவளை - அன்னக் கிளியை வாரி அணைத்துக் கொள்கிறான் அவன் - முத்துலிங்கம்!- கொஞ்ச முந்தி நான் பலவந்தப்படுத்தி இன்பம் அனுபவிச்சது ஒன்னைத்தானா? ஒன்னையே தானாங்காட்டியும்?’ என்று விக்கல் மேலிட, விம்மல் மேலிட வினவினான்.