59
‘ஊம்.’’ கொட்டினாள் அவள், ம்’. ம்.. ஆமாங்க நேசமச்சானே! அதாலதான் ஒங்களைச் சாக வொட்டாமல், தடுத்துப் பூட்டேனுங்க. ஆசை மம்முத ராசாவே’ கற் பின் கனலாகச் சூடு துரள் பறக்கக் கதறுகிறாள்,
கூந்தலின் நெடியில் இன்னமும் அவன் கிறக்கம் தெளியவில்லை! நானு பாவி என்னைச் சமிச்சு எனக்கு ‘மாப்புக் கொடுத்துப்புட மாட்டியாடி, புள்ளே இருந் திருந்து என்னோட இஷ்ட தெய்வத்தையே பயங்கர மானதொரு .ே சா தி ப் புக் கு ஆளாக்க நேர்ந்துப்பூட்ட என்னோட பாழும் விதியோட பாவத்தை என்னான்னு செப்பட்டும்? . ’ ஒலம் கூடியது.
அவனுடைய கண்ணிரைத் து ைடத் து விட்டாள் அன்னக்கிளி. தன் கண்ணிரையும் துடைத்துக் கொண்டாள். ஆசை மச்சானை அன்புடன் ஊடுருவினாள் ஒங்களைச் சோதிக்சுப் பார்க்க எத்தனிச்சேன்! நானே சோதனைக்கு ஆளாகிப்புட்டேன்! ஆமாங்க, மச்சான்காரவகளே ... அலறி அழுதாள்.
பிறைக்கும் கள்ள விழிப் பார்வை உண்டு!
அன்னப் பொண்ணே!
“புள்ளேன்னு விளியுங்க, மச்சானே!”
“...புள்ளே! ஊரறிய, நாடறிய ஒனக்கு மூணு முடிச்சுப் போட்டு ஒரு நல்ல புண்ணியத்தைக் கெலிப்போடவும், மானத்தோடவும் ரோசத்தோடவும் கட்டிக்கிடக் கனாக் கண்ட நான், ஊரறியாமல், நாடறியாமல் ஒரு பாவத்தை ஒனக்குச் செஞ்சுப்புட்டேனே, அன்னக்கிளியோ! என்னோட பாவம் என்னோடவே அழியட்டும்! என்னைத் தடுக்காதே புள்ளே!’
- அப்படின்னா, என் திட்டப்படியே என்னையும் சாக
விட்டுப் பூடுங்க!”