பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

தட்டப்படும் அரவத்தையும் அவன் காதுகள் ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒர் இக்கட்டு உருப்பெற்றது. சலனம்அரவமாய் நெளிந்தது.

நேரம் கெட்ட நேரத்திலே யார் வந்து இப்படி அவதி யோடு கதவைத் தட்டுகிறார்களோ, தெரியவில்லையே! ‘பூ’ விலிருந்து ஆபீஸ் பையன் வருவதற்கும் மார்க்கம் இல்லை! பின் யாராக இருக்கக்கூடும்? சீமான், மகன் பூமிநாதனாக இருக்கலாமோ? அவர் வில்லனாக நடித்த நாடகத்தைப் பற்றி என்ன விமர்சனம் எழுதியிருக்கிறேன் என்று கேட்டறிய வந்திருப்பாரோ?அவர் ரொம்பவும் மென்மையாக அல்லவா கதவைத் தட்டுவார்? மென் மையை உணர்ந்த நல்லவராயிற்றே அவர் யாருக்கோ, இவ்வளவு அவசரமாகக் கையை இடிக்கிறார்கள் :- இப் படிக் கதவை உடைப்பதை வீட்டுக்காரர் கேட்டால், உயிரையே விட்டு விடுவாரே ? - அவர் உயிரைப் போக்கடிக்கச் செய்து விடலாகாது! பாவம்!உயிரைக் கொடுத்து இக்கட்டடத்தைக் கட்டிய அருமை அவருக்குத் தான் தெரியும்! என்று ஒரே வினாடியில் ஒரு சில நினைவுகளைப் பின்னிய வண்ணம், மாடிப்படிகளின் வழியை அடைந்தான்;அவன் தாழ் விலக்கினான்

என்ன விந்தை இது !

நாடகக்காரி ஊர்வசி தலைவிரி கோலமாக நின்று கொண்டிருந்தாள்! நாடகத்தில் வில்லனால் கற்பழிக்கப்பட்ட கட்டத்திலே தோற்றம் தந்த அதே கோலத்துடன் காட்சி தந்தாள் நாடகம் முடிந்து நெடுநேரம் ஆகி விட்டதே பின் ஏன் இந்த நிலை அவளுக்கு ஏற்பட்டது? வேடத்தை-புனை வடிவத்தை மாற்றிக் கொள்ள மறந்து விட்டாளா, என்ன ?

“ஐயா!...”

இ - 5