பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

அவளைப் பார்க்கப் பார்க்க, அம்பலத்தரசனுக்கு வியப்பு ஒரு பக்கம் ஏற்பட்டது! வேதனை மறுபுறம் உண் டானது."இப்போது நான் உங்களுக்காக என்ன செய்ய வேணும்.ஊர்வசி?” என்று பாசத்தோடு வினவினான் அவள் தன்னிடம் எதிர்பார்த்து வந்த உரிமையின் - இனம் விளங்காத உரிமையின் உறவு பிரதிபலிக்கும் வகையில் அவன் பேச்சு அனுசரணை காட்டத் தவறவில்லை.

ஊர்வசி நளினமாகச் சிரித்தவண்ணம் அவனை ஆழ்ந்து நோக்கினாள்.

அந்தச் சிரிப்பின் நளினம் அவனுக்கு மேடை நாயகி ஊர்வசியின் ஒயில் நகையை நினைவூட்டியது. ஓர் அரைக் கணம் அவன் தன்னை மறக்க வேண்டியவன் ஆனான்.

சிரிப்பு அலையலையாக விரியத் தொடங்கியது

அவன் தன்னுணர்வு எய்தினான்

“மிஸ்டர் அம்பலத்தரசன்! நீங்க இன்னைக்கி ராத்திரி நடந்த நாடகத்துக்கு வந்திருந்தீங்க! மேடை நாடகத்தில் நான் கற்பழிக்கப்பட்ட போது, அந்தத் துன்பம் தாளாமல் அம்பிகையைச் சரண் புகுந்தேன். பிற்பாடு, நான் தற் கொலை செஞ்சுக்கிட எண்ணி கடலைத் தஞ்சம் அடைஞ் சேன்!... ஆனால் இப்போது, கற்பழிக்கப்பட்ட அபாக்கியவதி நான் உங்க முன்னே நிற்கிறேன்! எனக்குத் தஞ்சம் தர அலையெறி கடல் இப்போதும் ரெடியாகக் காத்துக்கிட்டு இருக்குது!ஆனா, எனக்கு ஆபத்துக்கு கைகொடுக்க அப் போது முன் வாாத அதே தெய்வம் இப்போதும் முன் வர வில்லை! இப்போதுள்ள நிலையிலே எனக்கு நானே காப்பாக ஆக வேண்டுமென்ற என் கனவை விதி அழித்து விட்ட நிலையிலே, இந்த ஒரு முடிவுக்கு நான் வருவதைத் தவிர வேறு மார்க்கம் ஒண்னுமே எனக்கு மட்டுப் படலே!