பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

மின்றி, பேசிக்கிட்டிருந்திட்டேன், உட்காருங்க. இதோ ஒரு நொடியிலே பாரிஸ் கார்னர் வரை போய்த் திரும்பிடு றேன், மிஸ் ஊர்வசி.

ஊர்வசி சலனத்தின் பிசிறு எதுவும் தடம்காட்டாத ஒரு பார்வையை நம்பிக்கையோடு அவன்பேரில் வீசி விட்டுப் புத்துணர்வுடன் மூரல் சிந்தினாள். “ஆல் ரைட்! யூ மே டேக் யுவர் ஒன் டைம்" என்று விடை அளித்துவிட்டு, கூடை நாற்காலியில் வெகு சுவாதீனத்தோடு குந்தினாள் ஊர்வசி. பூக்கள் மலர்ந்துசிரித்த மாம்பழ வர்ண நைலக்ஸ் புடவை யைச் சீர்ப்படுத்திக் கொண்டாள்.

அவளை நோக்கி, மீளவும் அதிசயப்பட்ட நிலையில் பார்த்துவிட்டு, விமரிசனத் தாள்களோடு அங் கிருந்து கிளம்பினான் அம்பலத்தரசன் "ஊர்வசி, கதவை நன்றாகத் தாளிட்டுக்கங்க” என்று எச்சரித்தான் அவன். சுருட்டை மயிர்கள் சில நெற்றித் திட்டில் தட்டின்றிப் புரண்டன.

"கதவு திறந்தே கிடக்கட்டுங்க. நான் உங்க ரூமூக்குக் காவல் இருப்பேன், நாணயத்தோடு" என்றாள் அவள். ஓர் உறுதிப்பாடு மிளிர்ந்தது பேச்சில். கழுத்துச் சங்கிலி மார் பிடை பதிந்திருந்தது.

தீப்பெட்டி கிடைத்து விட்டது.

இதழ்க்கங்கில் நகை மிளிர அந்நகை இணைப்பில் சிகரெட்டு புகை இழைய, அங்கிருந்து புறப்பட்டான் அம்பலத்தரசன்.

முத்துமாரி செட்டித் தெரு வழி விட்டது.