(iii)
பொன்விடியல் பூச்சொறிகின்ற இந்த வாழ்க்கையின் நிலைகள் பற்றின சிந்தனைகளிலேதான் என்னுடைய தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் உண்மையான, சத்தியமான, தருமமான என்னுடைய வாழ்க்கைப் பணியும் இரண்டறக் கலந்து உங்கள் 'பூவை' சொக்கப்பச்சை என்கிற உண்மையை - சத்தியத்தை - தருமத்தை உங்களுக்கு இந்த நாற்பத்தைந்து ஆண்டுக்காலமாக ‘இனம்’ காட்டி யும் வருகிறது அல்லவா?
அன்று, கவிச்சக்கரவர்த்திக்கு மிதிலைச் செல்வி சீதைதான் விதியின் நாயகியானாள்!
இன்று எனக்கு அந்தக் கோசலைச் செல்வன் பூரீராமனும் விதியின் நாயகனாக ஆகின்றான்!
விளைவோ, சூடானது; சுவையானது!
“இங்கே,ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்!” என்னும் பொன் மகுடமேந்திய இக் குறுநாவல்களின் இணைப்பிலே அடக்கம் தருகின்ற மூன்று பெருங்கதைகளுமே பொன் னாவைத்தான் என்பதை நான் அறிவேன்; நீங்களும் அறிந்திட வேண்டாமா?
அதற்கான நல்லதொரு அன்புப் பாலம் அமைத்துத் தருகின்றார் பதிப்பகத்தின் உரிமையாளர் திருமிகு இராமு அவர்கள்; அவர் பல்கலைச் செல்வர்!-
கவிக்கம்பனுக்கு மட்டிலும் தான் ஒரு சடையப்ப வள்ளல் கிடைத்திட வேண்டுமா, என்ன?
எனக்கும் கூட அந்தப்பாக்கியம் கிடைத்திருக்கிறது!
பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய திருமிகு இராமு அவர்களின் உள்ளன்பு பெரிது! கை தொழுகிறேன்.