76
அவனுடைய தவிப்பைக் கண்டு மனம் இளகிய ஆண்ட வன் அந்நேரத்தில் அங்கு பூமிநாதனின் தந்தை பூரீமான் சாந்தமூர்த்தியை அனுப்பி வைத்து, அம்பலத்தரசனுக்கு விடுதலை அளித்தான்!
"ட்ராமா முடிஞ்சு ரொம்ட நேரமாகிட்டுதே! உன்னை எங்கெல்லாம் தேடுகிறது, தம்பி?” என்று வருந்தினார் சாந்தமூர்த்தி.
விடை பெற்றான் பூமிநாதன்.
சாந்தமூர்த்தியின் 'பாண்டியாக்' முன்னே செல்ல பூமிநாதனின் 'டாட்ஜ்' பின்னே சென்றது.
‘கடவுளே!' என்று கிளம்பினான் அம்பலத்தரசன், வேர்வை ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது!
சீதளத் தென்றல் வீசியது!
நிலவு சிரித்துக்கொண்டே இருந்தது.
[3]
இந்தச் சோதனைகள் விதிக்குச் சொந்தமா?-இல்லை, தெய்வத்திற்குத்தான் உரிமையா?
தவிர்க்க முடியாத ஒரு விபத்துமாதிரி அமைந்துவிட்ட அந்த சோதனையைச் சமாளித்தாக வேண்டிய ஒரு நிர்ப் பந்தத்தோடு, அம்பலத்தரசன் மாடியிலிருந்த தன் இருப் பிடத்தை அடைந்தான். திறந்திருந்த மாடியின் வழியை அடைத்து வரத் திரும்பி மீண்டான்.
அறைக் கதவுகள் திறந்தபடியே இருந்தன.
“மிஸ் ஊர்வசி" என்று கூப்பிட்டான் அவன்.