77
எடுத்த எடுப்பில் அவனது பார்வைக்கு இலக்கானது அவளுடைய ஒயில் மண்டிய முதுகுப்புறம்தான். இடை வெளி விட்டிருந்த முதுகுப் பகுதியின்மேல் வசமாக ஒரு பெரிய நகக்கோடும் தென்பட்டது. நிலாக்கோடு அந்த நகக்கோட்டில் அழகாக விழுந்திருந்தது, கழுத்துச் சங்கிலி யின் தங்கச் சரம் வரம்பு கட்டியிருந்தது.
அவள் கொடுத்த குரல் அவளுக்குக் கேட்கவில்லை போலும்!.
அவள் தன்பாட்டில் என்னவோ எழுதிக் கொண்டிருந் தாள்.
அவன் மூச்சு விடாமல் அறைக்குள் நுழைந்து, அங்கு கிடந்த ஒரு பிரம்புச் சோபாவில் உட்கார்ந்து கொண்டான். காலடியில் விழுந்துக் கிடந்த அன்றையச் செய்தித் தாளை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு அதை மேஜையின் மறு ஒரத்தில் பதமாக வைத்துவிட்டு, ஊர்வசியைப் பார்த் தான். இன்னும்கூட அவன் வந்ததையோ, அல்லது வந்து அமர்ந்ததையோ அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவள் சிந்தை பூராவும் அவள் செயலிலேயே கட்டுண்டிருந் திருக்க வேண்டும்!
எழுதிய தாளின் அடியில் 'எஸ் ஊர்வசி' என்று கையெழுத்துச் செய்ததை அவன் கண்டான். -
“குமாரி ஊர்வசி" என்று மெல்லிய குரலெடுத்துக் கூப்பிட்டான் அம்பலத்தரசன்.
அவன் தலையை உயர்த்தி அவனை நோக்கினாள். "குமாரி ஊர்வசி!’ என்று வேதனையின் விரக்தியுடன் தனக்குத் தானே ஆற்றாமையோடு சொல்லிக் கொண் டாள். பிறகு, குரலில் சற்றே அழுத்தத்தைக் கூட்டி, "நீங்க வந்து நேரமாச்சோ?” என்று கேட்டாள் அவள்.