80
கையாள வேண்டி வந்திச்சு. ஆனா, எனக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கமோ தாகரிகமோ இன்னும் ஒட்டல்லேங்க நீங்கபிடியுங்க” என்றாள்.
"நான் சிகரெட் என்றுதானே சொன்னேன்? அதாகப் பட்டது. தான் சிகரெட் பிடிக்கிறதிலே உங்களுக்கு யாதொரு ஆட்சேபனையும் இல்லையே என்கிறதைத் தெரிஞ்சுக்கத்தான் அப்படிக் கேட்டேன்.”
"பேஷாகப் பிடியுங்க !”
புகைச் சூழத் தொடங்கியது.
"ஸார்!"
"சொல்லுங்க !"
“நான் இப்போது உங்ககிட்டே அடைக்கலப் பொருளாக வந்திருக்கேன் !"
“அதைத்தான் சொன்னீங்களே முன்னமேயே?'
“அப்படியானால், அந்த நிலையை நீங்க உணரலையா?” என்று குரலை உயர்த்திக் கேட்டான் ஊர்வசி.
“ஏன் அப்படிக் கேட்கிறீங்க? உணர்கிறேனே, அந்த நெருக்கடி நிலைமையை" என்று விடை அளித்தான், அம்பலத்தரசன்.
அவன் பேச்சு நின்றதும் அவனை உற்றுப் பார்த்தாள் அவள். அவனுடைய கண் விளிம்புகளிலே கண்ணிர் கரை கட்டி நின்றது.
“ஐயா, என்னோட நிலைமையை நீங்க உணர்ந்து கிட்டதற்காக இந்தக் கண்ணிர் ?”
கைந்தொடிப் பொழுது அவன் மெளனம் சாதித்தான்.