பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


பார்கள் ? அவளது நெஞ்சுரம் எழுதிக் கொடுத்த வசனங் களை அவனிடம் அவள் ஒப்புவித்தாள் - அல்ல, ஒப்ப டைத்தாள் ! -- அவ்வளவுதான் !

சிலையாக மலைத்துப் போயிருந்தான் அம்பலத்தரசன். அவன் கண்களில் தீவிரமான சிந்தனை இருந்தது. நெற்றி யில் பச்சை நரம்புகள் புடைத்திருந்தன. ஜிப்பாவைக் கழற்றி வீசினான். மேஜை மீதிருந்த படிகத்தில் எரிந்து கொண்டிருந்த சிகரட்டை மறந்து விட்டான். புதிய சிகரெட் ஒன்றைக் கொளுத்தினான். புகையும், புகைச்சல் இருமலும் ஒன்றாக வெளிப்படலாயின. வலது கை விரல் அமிர்தாஞ்சனச் சீசாவைத் திறந்தன. இடது கைவிரல் களும் ஆபத்துக்கு ஒத்தாசை செய்யத் தவறிவிடவில்லை

ஊர்வசி இருக்கையை விட்டு எழுந்தாள் சேலையைச் சீர் செய்து கொண்டாள். கழுத்தில் விளையாடிய தங்கச் சங்கிலியோடு ஒளிப் புள்ளிகள் விளையாடின. அவனை அண்டினாள். அமிர்தாஞ்சனத்தை தனது வலது கைப் பெருவிரல் கொண்டு எடுத்தாள்.

“இருங்க, நான் தடவித் தேய்த்து விடுகிறேன் என்னால் உண்டான தலைவலியை நான்தானுங்க தீர்க்க முடியும்! இந்தப் பாவியாலேதான் உங்களுக்கு எத்தனை பெரிய சோதனை முளைச்சிருக்குது!"என்றாள்.

அன்பின் நெருக்கத்தோடு அவளைப் பார்த்த அவன் கண்கள் கண்ணிரில் மிதந்தன,

தலைவலிக் களிம்பைத் தடவினாள் அவள்.

“அழறீங்களா நீங்களும் ? நான் அழுதது போதாதுங் களா?"என்று கேட்டுவிட்டு, அவளும் அழுதாள்.

அவள் கண்ணிரைத் துடைத்து விட்டான் அவன்.

அவனுடைய கைகள் நிதானமாகச் செயல்பட்டன.