பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

சூடான சாயா மேஜையில் காத்திருந்தது. ஆவி பறந்தது. வாசம் பிரிந்தது.

அதில் ஒருவாய் சப்பிப் பருகினான் அம்பலத்தரசன். அந்தத் தேநீரின் சூடும் சுவையும் அவனது அடி மனத்தைத் தொட்டிருக்க வேண்டும்.

பன்னிரண்டு மணிக்கு மேல் தொடர்ந்த இத்தகைய சிந்தனைகள் புதுப்புது உருவத்தோடும் புதுப்புது உள்ளத்தோடும் அவன் மனத்தில் ஒளிவீசி ஒளிகாட்டிக் கொண்டேயிருந்தன. அவளை என்னென்னவோ கேட்க வேண்டுமென்று ‘பூ’ அலுவலகத்திலிருந்து திரும்பி தம்புச் செட்டித் தெருவில் நடந்து, அங்கிருந்து மறுகி அரண்மனைக்காரத் தெருவில் அடிவைத்து, மீண்டும் மடங்கி, அந்தப் பிள்ளையாரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, முத்துமாரிச் செட்டித் தெருவில் வந்த சமயம் நினைத்திருந்தானே? ஒரு கேள்வியையாவது அவனால் கேட்க முடிந்ததா? இல்லை! அதற்குகந்த சந்தர்ப்பத்தை அவள் கொடுத்தால்தானே?

ஊர்வசியைப் பற்றி எண்ணமிட்டான். அவ் வெண்ணத்தை நினைப்பதற்கு மீண்டும் சக்தி தேவைப் பட்டதை உணர்ந்திருந்தவன் போல, அடுத்த தடவை யாகச் சாயாவைக் குடித்தான். ஒரே மூச்சாகக் குடித் தான். இப்போது அவன் சிந்தனைக்குப் புகைச் சூடும் தேவைப்பட்டது. ஊதினான். நெஞ்சின் வலது விலாப் புறத்தில் லேசாக வலிப்பதாகவும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. வழக்கமாக விழுங்கும் ‘பிப்ளெக்ஸ்ஃ பார்ட்'டில் இரண்டைப் போட்டுக்கொண்டு ஒரு குவளை தண்ணிர் ஊற்றினால் வலி தீர்ந்துவிடும் என்ற உபாயமும் அவனுக்கு அத்துப்படிதான்!

ஊர்வசியைப் பற்றிய அழகிய நினைவை நெஞ்சக் கிழியில் பதித்துச் சிந்தித்த போது தன்னையும் அறியாத பான்மையில் ஒரு புது உரிமையும் ஒரு புது உறவும்