பக்கம்:இசைத்தமிழ்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 " வண்டாகிய பள்ளியுணர்த்துவான் புற நீர்மை என்கின்ற பண்ணேப்பாட, குவனே கண் மலர் போல விழிப்ப' என இதற்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய உரைக் குறிப்பாலும் இனிது விளங்கும். காலையில் மருதமும், மாலேயிற் செவ்வழியும், நள் விரவிற் குறிஞ்சியும் பாடுதல் வேண்டும் என்பது பழந் தமிழ் இசைமரபு. இம்மரபினை, ' யாழோர் மருதம் பண் ண ' |மதுரைக் - 6.58) எனவும், " செவ் வழியாழிசை நிற்ப ...... மாலையும் வந்தன்று ’’ (கலி 143, 28 - 4) எனவும், ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சியாட மறம் புகல் மழகளி றுறங்கும் ” (அகம் - 102) எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களால் நன்குனர லாம். " பாலேயாழொடு செவ்வழி பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும் ” என்ருர் திருநாவுக்கரசரும். இதல்ை செவ்வழிப்பண் மாலைக் காலத்திற் பாடுதற்குச் சிறப்புரிமையுடைய தென்பது நன்கு புலளுதல் காணலாம். தண்டியலங்காரத்தில் நுட்ப அணிக்கு உதாரணமாக அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/100&oldid=744949" இலிருந்து மீள்விக்கப்பட்டது