பக்கம்:இசைத்தமிழ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 என்ற பண்ணில் அமைந்ததாகும். திருவொற்றியூரிலே சங்கிலியார்க்குக் கூறிய சூள் பிழைத்து அவ்வூரைவிட்டு நீங்கினமையாற் கண்களை யிழந்து வருந்திய சுந்தரர், காஞ்சியில் திருவேகம்பரைப்பரவி இடக்கண் பெற்றுப் பல தலங்களையும் வணங்கி ஒருநாள் மாலைப்பொழுதில் திருவாரூரை யடைந்து பரவையுண்மண்டளி யிறைவரைப் பாடிப் போற்றித் திருஅத்தயாமகாலத்தில் திருவாரூர்ப் பூங்கோயிலமர்ந்த பெருமானை ஏதிலார்போல் வினவிக் கைக்கிளைத் திணையிற் பாடிய திருப்பதிகம், குருகுபாய' என்னும் முதற்குறிப்புடையதாகும். இப்பதிகம் கொல்லிப் பண்ணிற் பாடப்பெற்றதாகும். சுந்தரரால் நள்ளிரவில் பாடப்பெற்றனவாகச் சேக் கிழாரடிகள் குறித்த இவ்விரு பதிகங்களும் முறையே கொல்லிக்கெளவாணம் கொல்லி என்ற பண்களில் அமைந்திருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால், இவ்விரு பண்களையும் இராப்பண்களாக வகுத்த முன்னேரது பகுப்பு முறையின் நுட்பம் இனிது புலனும். தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பண்வகுக்கச் செய்த திருமுறைகண்ட சோழன் காலத்தும் சேக்கிழார் காலத்தும் நிலவிய இசைமரபும், சாரங்க தேவர் சங்கீதரத்தனுகரத்திற் குறித்த தேவாரப் பண்களின் இசைமரபும் தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் வழங்கிய இசைமரபாகும். தேவாரத் திருப்பதிகங்களை முன்னேர் பாடிய இசைமுறையின்படி இக்காலத்தும் பாடிக்கேட்டு மகிழும் வண்ணம் தேவாரப் பண்களின் இலக்கணங்களே உணர்ந்துகொள்ளுதற்குச் சாரங்க தேவர் இயற்றிய இசைநூல் ஓரளவு துணைபுரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/102&oldid=744951" இலிருந்து மீள்விக்கப்பட்டது