பக்கம்:இசைத்தமிழ்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9籍 நிலையில் அமைந்திருத்தல் காணலாம். தமிழ் முன்ளுேர் கண்ட ஏழ்பெரும்பாலே ஐந்து சிறுபாலே ஆகிய பன்னிரு பாலைகளும் நிலையான இசையுருவங்களாகும். இவற்றின் முதல் நரம்பு வேறுபடுமிடத்தும் இந்நிரல்களின் இசை வேறுபடுதலில்லை. சங்கீத ரத்தினகரத்திற் கூறப்படும் இடைக்காலத்து மூர்ச்சனைகளோ அவ்வம் முர்ச்சனைகளின் முதலில் நிற்கும் சுரத்திருற் பெயர்பெற்றவை. அவை காகலி அந்தரங்களோடு கூடிவருதலாலே இசை வேறுபடு மிடத்தும் அவற்றின் பெயர் வேறுபடுதலில்லை. இக்குறிப்புக்களை யுளத்திற்கொண்டு, தமிழர் வகுத்க நூற்று மூன்று பண்களின் அமைப்பினையும் சங்கீதரத்தன கரத்திற் குறிக்கப்பெற்ற முர்ச்சனைகளையும் ஒப்புநோக்கி யாராய்ந்து, தேவாரப் பண்களின் இசையுருவங்களையும் அப்பண்கள் அமைந்த பதிகங்களுக்குரியனவாகப் பிற்காலத் தார் மேற்கொண்டு பாடிவரும் இராகங்களைப் பற்றி நாரத சங்கீத மகரந்தம், சதுர்தண்டிப் பிரகாசிகை முதலிய வட மொழி யிசைநூல்களிற் காணப்படும் இசையமைதியையும் அருள்மிகு விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் தேவார இயலில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். தென்னுட்டு இசைத்துறை யில் ஷட்ஜம் சுத்தரிஷபம், சதுசுருதி ரிஷபம், சாதாரண காந் தாரம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பிரதி மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுசுருதி தைவதம், கைசிகி நிஷாதம், காகலி நிஷாதம் எனவழங்கும் பன்னிரண்டு இசை நிலைகளும் முறையே ச, ர, ரி, க, கி, ம, மி, ப, த, தி, ந, நி, என்னும் குறியீட்டெழுத்துக்களால் யாழ்நூலிற் குறிப்பிடப்பட்டன. யாழ்நூலாசிரியர் கூறிய விளக்கங்களை அடியொற்றித் தேவாரப் பண்களைப்பற்றி அறிந்துகொள்ளத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/103&oldid=744952" இலிருந்து மீள்விக்கப்பட்டது