பக்கம்:இசைத்தமிழ்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 தக்க குறிப்புக்களை ஈண்டு ஒருசிறிது தொகுத்து நோக் குதல் இன்றியமையாததாகும். 13. செவ்வழி முல்லைப் பெரும்பண்ணுய், நூற்றுமுன்று என்னும் பண் வரிசையில் 13 என்னும் எண் பெற்றது செவ்வழி என்ற பண்ணுகும். இரண்டாந் திருமுறையில் 113 முதல் 122 வரையுள்ள பதிகங்கள் செவ்வழிப் பண்ணுக்கு உரியன. இது மாலைப்பொழுதிற் பாடுதற் குரியதென்பது முன்னர் விளக்கப்பெற்றது. கிரம வழக்கு வீழ்ந்த இடைக் காலத்தில் இவ்வரையறை மாறியதும் உண்டு. சேக்கிழா ரடிகள், 'மாறுமுதற் பண்ணின் பின் வளர்முல் லேப் பண்ணுக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமைகொள விடுந்தானம் ஆறுலவுஞ் சடைமுடியார் அஞ்செழுத்தின் இசைபெருகக் கூறிய பட்டடைக் குரலாங் கோடிப்பாலேயின் நிறுத்தி’ (பெரிய-ஆனுயர்-25) என முல்லைப்பண்ணுக்குக் கோடிப்பாலை கொண்டதுமன்றி அது தாரமும் உழையும் கிழமைகொளும் எனவும் கூறி யிருத்தலால், கரகரப்பிரியா ராகத்தினக், காந்தார நிஷாத சுரங்கள் அம்ச சுரமாகக்கொண்டு பாடுமிடத்துச் செவ்வழிப் பண்ணின் உருவம் தோன்றும் என்பர் யாழ் நூலார், செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகங்களைப் பிற் காலத்தார் எதுகுல காம்போதியிற் பாடுதலை மரபாகக் கொண்டனர். 17. தக்கராகம் பாலைப்பெரும்பண்ணில் தோன்றிய 'அராகம்' என் னும் திறத்தின் அகநிலையாய்ப் பண்வரிசையில் 17 என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/104&oldid=744953" இலிருந்து மீள்விக்கப்பட்டது