பக்கம்:இசைத்தமிழ்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 னும் எண்பெற்று நிற்பது தக்கராகம். இது முதல் திரு முறையில் 23 முதல் 46 வரையுள்ள பதிகங்களிலும், ஏழா ந் திருமுறையில் 13 முதல் 16 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. هي التي 'டக்க என்னும் இராகமானது, சட்ஜ. மத்யமா, தை வதி என்னும் ஜாதிராகங்களிலே தோன்றி, அற்ப பஞ்சம முடையதாய், சட்ஜசுரத்தை முதல் முடிவு கிழமையாகப் பெற்றுக் காகலி அந்தரங்களோடு கூடி வருவது; ஆத்ய மூர்ச்சனையினைக் கொண்டது; உருத்திரருக்கு உவந்தது; கார்காலத்திற்கு உரியது; பெருமிதம் மருட்கை வெகுளி என்னும் சுவைகளையுடையது; போர் வீரைெடு தொடர் புடையது” என்றும், "டக்க ராகத்தின் விபாஷையாகிய தேவார வர்த்த நீ பஞ்சம அம்சம், பஞ்சம கிரகம், சட்ஜ நியாசம் உடையது; சம்பூரணமானது" என்றும் சாரங்க தேவர் கூறுவர். இதன் ஆளத்தியினை நோக்குமிடத்து ரிஷபம் நீங்கியும் பஞ்சமம் (ஒருமுறை மாத்திரம் தோற்றி) அற்பமாகவும் நிற்றல் புலளும். மத்தியமக்கிராமத்து செனவிரி என்னும் முர்ச்சனையினை ஆத்ய முர்ச்சனை யெனக்கொள்ளலாம். காகலி அந்தரங்களோடு கூடிய நிலையில் அது மேசகல்யாணி மேளத்திற்கு ஒப்பாகும். மயதநிசரிக' என்ற நிரலில் பஞ்சம ரிஷபங்கள் நீங்குதல், "சரிகமபதநி என்ற நிரலில் ரிஷபதைவதங்கள் நீங்குத லாகும். ஆதலால் கிமிபநி - நிதியமிகிரி என ஒளடவ சம்பூரணமாக இப்பண்ணின் உருவத்தைக் கொள்ளலாம் என்பர் யாழ் நூலாசிரியர். தக்கராகப் பதிகங்களைக் கன்னட காம்போதியிலும், காம்போதியிலும் பாடுதல் பிற்கால வழக்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/105&oldid=744954" இலிருந்து மீள்விக்கப்பட்டது