பக்கம்:இசைத்தமிழ்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3? 124, 25-ஆம் பதிகங்கள் இப்பண்ணில் அமைந்தன. இதன் பழைய இசையுருவம் இதுவெனத் தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்பண்ணமைந்த பதிகங்களைச் சைல தேசாட்சி என்ற இராகத்திலும் சாமா இராகத்திலும் பாடு தலே வழக்கமாகக் கொண்டனர் பிற்காலத்தார். 41. காந்தாரம் குறிஞ்சிப் பெரும்பண்ணின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 41 என்னும் எண்பெற்று நின்றது காந்தாரம். இப்பண், இரண்டாந் திருமுறையில் 54 முதல் 82 வரை புள்ள பதிகங்களிலும், நான்காந் திருமுறையில் 2 முதல் 7 வரையுள்ள பதிகங்களிலும், ஏழா ந் திருமுறையில் 7: முதல் 75 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. 'க: நிதாச பஞ்சமத்தின் பாஷாங்கராகமாகிய காந்தாகி என்பது, ஷட்ஜ மத்திமங்களால் அலங்கரிக்கப் பெற்றுத் தைவதம் இன்றி வரும் என்பர் சாாங்கதேவர். காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட' என ஆளுடைய பிள்ளையார் கூறுதலால், சாரங்கதேவர் கூறிய காத்தாரியே காந்தாரப்பண் எனக் கொள்ளுதல் பொருந் தும் எனவும், சங்கீத ரத்தனகரத்தில் தேவார வர்த்தநீ யாகிய கெளசிகத்தை யடுத்து இப்பண் கூறப்பட்டிருத்தல் இதனே வலியுறுத்தும் எனவும், செம்பாலேக்குரிய ரிகிம பதிந என்னும் உருவில் தைவதம் நீங்கலாக எஞ்சி நின்ற ரிகிமபந என்னும் கத்தஷாடவ வுருவத்தைக் காந்தாரப் பண்ணுக்கு உருவமாகக் கொள்ளலாம் எனவும், பாலைப் பெரும்பண்ணின் ஆசான் என்னுந் திறத்தின் அகநிலையாய் 33 என்னும் எண்பெற்ற காந்தாரத்தை நாரத சங்கீத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/109&oldid=744958" இலிருந்து மீள்விக்கப்பட்டது