பக்கம்:இசைத்தமிழ்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Íñó யோடு கூடியது; பஞ்சமம் முதலாகிய முர்ச்சனையை யுடையது; நகை, உவகை என்னும் சுவைகளைப் பொருந்தி யது; துர்க்கையை அதிதெய்வமாகக் கொண்டது” என்பர் சாரங்கதேவர். பஞ்சமம் முதலாகிய சுத் தஷட்ஜா என்னும் மூர்ச்சனை யானது நடபைரவி மேளமாகும் பஞ்சமம் ஆதார சுருதி யாக நிற்க, பஞ்சமம் சதுசுருதிதைவதம், கைசிகி நிஷாதம் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம் என எடுக்க நடபைரவி மேளமாகும். இந்நிரலில் தைவதரிஷபூங்களை நீக்குதல், சரிகமப தநிச என்னும் நிரலில் ரிஷப பஞ்சமங்களை நீக்குதலாகும். யாழ் நூலார் கொண்ட குறியீட்டின் படி நர் த என்னும் இராகத் தின் உருவம் 'கம்ப தந’ என்பதாகும். சதுர் தண்டிப் பிர சாசிகை அநுபந்தத்தில் 20-ஆம் மேளத்தின் கீழே 'பஞ்சம ரிஷப வர்ஜிதமும், ஆகவே ஒளடுவமும், ஷட்ஜக்ரஹத்தோடு கூடியதுமான ஹிந்தோளம் என்பது அறிஞர்களால் எல்லாக் காலத்திலும் பாடப்படுவதாம்” எனக் கூறப்படுதலின், நட்டராகமானது இக்காலத்தில் தென்னுட்டில் இந்தோளம்' என்ற பெயருடன் வழங்கும் இராகத்திற்கு ஒப்பானது என்பர் யாழ்நூலாசிரியர், பிற்காலத்தார் நட்டராகப் பதி கங்களைப் பந்துவராளியிற் பாடி வருகின்றனர். 64. வியாழக் குறிஞ்சி இது, குறிஞ்சிப் பெரும்பண்ணில் அரற்று' என்னுந் திறத்தின் பெருகியலாய்ய் பண் வரிசையில் 84 என்னும் எண் பெற்றது. இப்பண் முதல் திருமுறையில் 104 முதல் 128 வரையுள்ன பதிகங்களிற் பொருந்தியுளது. இதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/113&oldid=744963" இலிருந்து மீள்விக்கப்பட்டது