பக்கம்:இசைத்தமிழ்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 பழைய இசையுருவம் இதுவெனப் புலப்படவில்லை. பிற் காலத்தார் வியாழக் குறிஞ்சிப் பதிகங்களைச் செளராஷ்டிரம் என்ற இராகத்திற் பாடி வருகின்றனர். 65. செந்துருத்தி செந்திறம்} குறிஞ்சிப் பெரும்பண்ணில் செந்திறம் என்னுந் திறத்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 65 என்னும் எண் பெற்றது. செந்துருத்தி. இது, செம்பாலையிலே தோற்றிய திறமாதலின் செந்திறம் என வழங்கப்பெறும். இப்பண் ஏழாந்திருமுறையில் 95-ஆம் பதிகத்தில் அமைந் துளது. நாரத சங்கீத மகரந்தம் என்ற நூலில் ம-முதலா கிய முர்ச்சனையில், ரி, த இல்லாமல் தோற்றுவது 'மதுமாதவி' என்ற இராகம் எனக் குறிக்கப்பெற்றது. ச-முதலாகிய சரிகிமபதிந என்னும் செம்பாலே (அரிகாம் போதி) நிரலில் கி. தி நீங்க எஞ்சி நிற்கும் ரி ம ப ந: என்பது இதன் உருவம் எனவும், மதுமாதவி என்ற பெயரே மத்தியமாவதி எனத் திரிந்தது என்வும் கொள்வர் யாழ்நூலார், 69. தக்கேசி மருதப் பெரும்பெண்ணின் நவிர்' என்னுந் திறத்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 69 என்னும் எண் பெற் றது தக்கேசி. இப்பண், முதல் திருமுறையில் 63 முதல் 74 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 54 முதல் 70 வரையுள்ள பதிகங்களிலும் பொருந்தியுளது. இதனை 'டக்க கைசிகம் என வழங்குவர் சாரங்கதேவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/114&oldid=744964" இலிருந்து மீள்விக்கப்பட்டது