பக்கம்:இசைத்தமிழ்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {}9 31 முதல் 37 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் அருளிய திருநேரிசை, திருவிருத்தம் என்ற பதிகங்களையும் கொல்லிப் பண்ணுக்கு உரியனவாக இடைக் காலத்தார் கொண்டனர். கொல்லியின் பழைய இசை யுருவம் இதுவெனத் திட்டமாகக் கூறுதற்கியலவில்லை. கொல்லிப் பண்ணுக்குரிய பதிகங்களைப் பின்னுள்ளோர் 'நவரோசு என்னும் இராகத்திற் பாடுதலை மரபாகக் கொண்டுள்ளனர். 73. இந் தளம் மருதப்பெரும் பண்ணின் வடுகு' என்னுந் திறத்தின் அகநிலையாய்ப் பண்வரிசையில் 72-என்னும் எண்பெற்றது இந்தளம். இப்பண் இரண்டா ந் திருமுறையில் முதல் 39 வரையுள்ள பதிகங்களிலும், நான்கா ந் திருமுறையில் 16, 17, 18-ஆம் பதிகங்களிலும், ஏழா ந் திருமுறையில் முதல் 12 வரையுள்ள பதிகங்களிலும், பதினுேரா ந் திருமுறையில் உள்ள எட்டியிலவம்’ என்னும் முதற் குறிப் புடைய முத்த திருப்பதிகத்திலும் அமைந்துளது, அன்றியும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகங்கள் இந்தளப்பண்ணுக்கு உரியவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளன. 'ஹிந்தோளகம் என்னும் இராகமானது தைவதி, ஆர்ஷபி என்னும் ஜாதி ராகங்களிலே தோன்றி, ரிஷப தைவதங்கள் இன்றி, முதல் முடிவு கிழமை என்னும் முன் றும் ஷட்ஜசுரமாக வருவது, சுத் தமத்ய என்னும் முர்ச் சனையைக் கொண்டது. பெருமிதம் மருட்கை வெகுளி என்னும் சுவைகளையுடையது; இளவேனிற் காலத்திற்கு ஏற்றது; மகரக்கொடியோனுய மன்மதனை அதிதெய்வமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/116&oldid=744966" இலிருந்து மீள்விக்கப்பட்டது