பக்கம்:இசைத்தமிழ்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i i களோடு கூடி வருங்கால் தீரசங்கராபரணம் கொள்ளுதற் குரியதெனவும், அங்ங்ணங் கொண்டால் இந்தளப் பண் ணின் உருவம் கிமபநி ஆகும் எனவும், வடநாட்டில் வழங்கும் 'தெலுங்க என்னும் இராகமும், 36-ஆம் மேளத் திற் பிறந்த கம்பீரநாட என்னும் இராகமும் இவ்வுரு வினவே யெனவும், விபுலாநந்த அடிகளார் யாழ் நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள். தமிழ்ப்பண்ணுகிய இந்தளம் வடுகு என்ற பெய ராலும் வழங்கப்பெற்றுள்ளது. எனவே தமிழ் நாட்டில் "வடுகு' என்ற பெயரால் வழங்கும் இந் தளமும், வடநாட் டில் தெலுங்க என்ற பெயரால் வழங்கும் இந்தளமும் ஒன்றேயென்பது நன்கு துணியப்படும், இந்தனப்பதிகங்களே லளிதபஞ்சமியிலும் நாத நாமக்கிரியையிலும் பாடும் வழக் கம் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். 76. காந்தார பஞ்சமம் மருதப்பெரும் பண்ணின் வடுகு என்னுந் திறத்தின் பெருகியலாய்ப் பண்வரிசையில் 76-என்னும் எண் பெற்றது காந்தாரபஞ்சமம். இது, முன்ருந்திருமுறையில் 1-முதல் 23வரையுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறை யில் 10, 11-ஆம் பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 75-ஆம் பதிகத்திலும் அமைந்துளது. காந்தாரபஞ்சமம் என்பது, காந்தாரி, ரக்த காந்தாரி என்னும் ஜாதிராகங்களிலே தோன்றிக் காந்தார சுரத்தினை முதல் முடிவு கிழமையாகப் பெற்று வருவது; ஹாரினஸ்வா என்னும் முர்ச்சனையுடையது; இராகுவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/118&oldid=744968" இலிருந்து மீள்விக்கப்பட்டது