பக்கம்:இசைத்தமிழ்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| #3 உடையதாய்க் காகலியோடு கூடி வருவது மாளவ கைசிகம். இது சட்ஜம் முதலாகிய மூர்ச்சனையுடையது; வீரம், வெகுளி, வியப்பு என்னும் சுவைகளோடு வருவது, முன்பணிக்காலத்திற்கு உரியது” எனவும் மாளவ கைசி கத்தின் விபாஷாவாக அமைந்த தேவாரவர்த்தநீ என்ற இராகம், சட்ஜத்தை அம்சமாகவும் பஞ்சமத்தை நியாச மாகவும் பெற்றுக் காந்தார நிஷாதசுரங்கள் விடுபட்டு நிற்பது' எனவும் கூறுவர் சாரங்கதேவர். அவரால் தேவார வர்த்தநீ எனக் குறிக்கப்பெற்ற கெளசிகப்பண்ணின் உருவம், ரிமபதி என்றும் வடநாட்டார் சுர-மல்ஹார்’ என வழங்கும் சுத்தராகம் இவ்வுருவினது என்றும், இது தென்னுட்டில் சுத்த சாவேரி என வழங்கப்படுவதென்றும் யாழ்நூலாசிரியர் விளக்கம் தருகின்ருர். கெளசிகப் பதி கங்களை இக்காலத்தார் பயிரவி இராகத்திற் பாடிவரு கின்றனர். 81. பியங்தைக்காந்தாரம் மருதப்பெரும்பண்ணின் செய்திறம் என்பதன் அக நிலையாய்ப் பண் வரிசையில் 81-என்னும் எண் பெற்றது 'பியந்தை' என்ற பண்ணுகும். பியந்தை என்ற இப்பண் ணும் தேவாரத்தில் வரும் பியந்தைக் காந்தாரமும் ஒன்றே யெனக் கொள்ளுதல் பொருந்தும். இப்பண் இரண்டாந் திருமுறையில் 83 முதல் 96 வரையுள்ள பதிகங்களிலும், நான்காத்திருமுறையில் 8-ஆம் பதிகத்திலும், ஏழாந்திரு முறையில் 76-ஆம் பதிகத்திலும் அமைந்துளது. இப்பண் ணின் இசையமைதி இதுவெனத் திட்டமாகக் கூறுதற் கியலவில்லை பியந்தைக்காந்தாரப் பதிகங்கள் பிற்காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/120&oldid=744971" இலிருந்து மீள்விக்கப்பட்டது